இந்த முறை பாவக்காய் செய்து கொடுத்தால், கசப்பு சுத்தமாகத் தெரியாது. குழந்தைகள் கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். வாருங்கள், எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாகற்காய்
மஞ்சள் தூள்
உப்பு
மிளகு
சீரகம்
சோம்பு
வரமிளகாய்
புளி
வெங்காயம்
நறுக்கிய பூண்டு
துருவிய பன்னீர்
மல்லித்தழை
எண்ணெய்
செய்முறை:
முதலில் பாவக்காயை வட்டமாக நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் நறுக்கிய பாவக்காயைச் சேர்த்து, நன்கு வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய் ஆகியவற்றை வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும். ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் சிறிது புளி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுது மிகவும் கெட்டியாக இல்லாமல், சற்று நீர்த்தாரை போல இருக்க வேண்டும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பின்னர், துருவிய பன்னீர், தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய மல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து ஸ்டஃபிங்கை தயார் செய்யவும்.
வேகவைத்த பாவக்காய்க்குள் தயார் செய்து வைத்துள்ள ஸ்டஃபிங்கை நிரப்பவும்.ஒரு தவாவில் எண்ணெய் விட்டு, ஸ்டஃபிங் செய்த பாவக்காயை வைத்து, இருபுறமும் நன்கு சிவக்கும் வரை ரோஸ்ட் செய்யவும். சுத்தமாக கசப்புத் தெரியக்கூடாது என்றால், இன்னும் சிறிது எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ரோஸ்ட் செய்து எடுத்தால் சுவையான பாகற்காய் ரெசிபி தயார்.