கருவாட்டில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் ஒமேகா-3 உதவுகிறது. கருவாடு புரதத்தின் சிறந்த மூலமாகும். இது உடல் வளர்ச்சிக்கும், தசை வளர்ச்சிக்கும், திசுக்களை சரி செய்வதற்கும் அவசியமானதாகும். 100 கிராம் கருவாட்டில் சுமார் 50 முதல் 60 கிராம் வரை புரதம் இருக்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கு ஏற்ப
கருவாடு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 3 எண்ணம்
சின்ன வெங்காயம் - 5-8 எண்ணம்
பூண்டு - 5-8 எண்ணம்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - 1/2 நெல்லிக்காய் அளவு
தக்காளி - 1 எண்ணம்
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த நெத்திலி கருவாடை (தலை கிள்ளி, வெந்நீரில் நன்கு கழுவியது) சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, கருவாடு மொறுமொறுப்பாகும் வரை நன்கு வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் மேலும் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுக்கவும். பின்னர், நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, புளி, கறிவேப்பிலை, மற்றும் தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும். இந்தக் கலவை நன்றாக வதங்கியதும், ஒரு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்கு கிளறி, மேலும் சிறிது உப்பு சேர்க்கவும்.
இந்தக் கலவையை மிக்ஸியில் போட்டு, 'பல்ஸ் மோடில்' (fulls mode) சற்று கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். கடைசியாக, இதன் மேல் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும். இது நெத்திலி கருவாட்டுத் தொக்கின் சுவையை மேம்படுத்தும்.