இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் சூடு. குறிப்பாக கோடை காலத்தில் அதிகம் உடல் சூடு பாதிப்பு இருக்கும். இதனை தடுக்க, பாலக்கீரை அதிகம் உதவும். இதில் நீர்சசத்து அதிகம் இருப்பதால் உடல் உஷ்ணம் குறைக்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இதில், மெக்னீசியம், ஜிங்க், காப்பர், வைட்டமின், கே அதிகம் இருப்பதால், பல்லுக்கும், எலும்புக்கும் அதிக ஆரோக்கியத்தை கொடுக்கிறது. இந்த பாலக்கீரை வைத்து தொக்கு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
பாலக்கீரை - ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 30
பூண்டு 7 பல்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகுததூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணெய், கடுகு, வெந்தயம், இடித்த பூண்டு, கறிவேப்பிலை,
செய்முறை:
முதலில் பாலக்கீரையை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுத்து சின்ன வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு வாணலில், எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், இடித்த பூண்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காய விழுதை சேர்க்கவும். இந்த கலவையை சிறிது நேரம் வேக வைத்து அதில், நறுக்கிய பலக்கீரையை சேர்க்கவும்.
பாலக்கீரை நன்றாக வதங்கி வெந்தவுடன் இறக்கினால் சுவையான பாலக்கீரை தொக்கு ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.