பீர்க்கங்காய் அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறி என்பதால், உடலில் உள்ள அதிகப்படியான சூட்டைக் குறைக்க உதவுகிறது. இதில் ஜிங்க், பொட்டாசியம், காப்பர், செலினியம் போன்ற மினரல்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. பீர்க்கங்காய் நார்ச்சத்துக்களால் நிறைந்து காணப்படக்கூடிய காய்கறி இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க ஏதுவாக அமைகிறது.
பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ, சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை நிறைந்துள்ளது. இந்த பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கவும், ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை போக்கி, சரும திசுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி இரத்தத்தை சுத்திகரிக்கிறது. சரும செல்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. இது முகப்பருக்கள், தொற்றுக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றைத் தடுத்து, பளபளப்பான சருமத்தைத் தருகிறது.
இப்படி பல பயன்களை கொடுக்கும் பீர்க்கங்காய் வைத்து கடையல் செய்து சாப்பிடுவது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் 1 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 15
பச்சை மிளகாய் 2
வெங்காயம் – 2
தக்காளி - 2
கறிவேப்பிலை
பூண்டு 5
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1/2 தேக்கரண்டி
பீர்க்கங்காய் 1/4 கிலோ
செய்முறை:
முதலில் பீர்க்கங்காயை நன்றாக சுத்தம் செய்து, நறுக்கி தனியாக எடுத்து வைத்தக்கொள்ளவும். அடுத்து ஒரு சட்டியில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து இதில் வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளியை சேர்க்கவும். அதன்பிறகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்க்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து, மல்லித்தூள், துவையான அளவு உப்பு சேர்த்து, பச்ச வாசனை போகும்வரை வதக்கி, இறுதியாக பீர்க்கங்காளை சேர்க்கவும். இந்த கலவையை வதக்கிவிட்டு தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
இறுதியாக மத்து வைத்து கடைந்து எடுத்தால் சுவையான பீர்க்கங்காய் கடையல் தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.