தென்னிந்தியாவின் ஒரு பிரபலமான மற்றும் சுவையான உணவு உளுந்து வடை. உளுத்தம்பருப்பை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு மொறுமொறுப்பான, உள்ளே மென்மையான இந்த வடை, தமிழகத்தில் பொதுவாக மெது வடை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வடை பொதுவாக வட்ட வடிவத்தில் நடுவில் ஒரு துளையுடன் இருக்கும். இந்த துளை வடை சீராக வேக உதவுகிறது.
Advertisment
உளுந்து வடைக்கு சில மருத்துவப் பலன்களும் இருப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் வாதம் அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் உளுந்து வடை சாப்பிடுவது உடலுக்கு நல்லது என சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. வாய்ப்புண், வயிற்றுப்புண், இடுப்பு வலி, எலும்புத் தேய்மானம் போன்றவற்றுக்கும் உளுந்து நல்ல பலன் தரும் என்றும் கூறப்படுகிறது.
ஊற வைத்த உளுந்தை மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து, மிருதுவாகவும், புசுபுசுவென்றும் அரைத்து மாவு கெட்டியாகவும், பஞ்சு போலவும் இருக்கும்படி அரைத்துக்கொள்ள வேண்டும். மிக்சியில் அரைப்பதை விட கிரைண்டரில் மாவு அரைப்பது வடை சிறந்த பதத்தில் வருவதற்கு உதவுமு். மிக்சியில் அரைக்கும்போது, ஜார் சூடாகாமல் இருக்க குளிர்ந்த நீர் அல்லது ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தலாம்.
அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து, மாவை சிறு உருண்டைகளாக்கி, நடுவில் துளையிட்டு, சூடான எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக மாறும் வரை பொறித்து எடுத்தால் சுவையான உளுந்து வடை தயாராகிவிடும். தமிழகத்தில் அதிகம் செய்யப்படும் வடை என்றாலும் கூட பலருக்கும் இந்த வடை, சரியாக பதத்தில் வட்ட வடிவில் வராது.
Advertisment
Advertisements
இதனை சரி செய்ய, ஒரு சிறிய துணியை தண்ணீரில் நனைத்து, அதை ஒரு டம்பளரில் கட்டி, அதன்மீது மாவை வைத்து, வட்ட வடிவில் செய்து, நடுவில் துளையிட்டு, எண்ணெயில் பொறித்து எடுக்கலாம். இப்படி செய்யும்போது வடை வட்ட வடிவில் சரியாக பதத்திற்கு வரும். துணியை கண்டிப்பாக தண்ணீரில் நனைத்து தான் பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் நீங்களும் ட்ரைபண்ணி பாருங்க.