மட்டன் வேக வைத்த தண்ணீரை வைத்து சுவையான கறி கஞ்சி ரசம் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
புளி பாதி எலுமிச்சை
தக்காளி - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பூண்டு - 6
கறிவேப்பிலை
பச்சை மிளகாய் - 1
எண்ணெய் - 10 மிலி
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலைகள் சிறிது
செய்முறை:
முதலில் மட்டனை குக்கரில் தண்ணீர் சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து வடிகட்ட தண்ணீரை தனியாக எடுத்து வைத்தக்கொள்ளவும். அதன்பிறகு, புளியை தண்ணீரில் கரைத்து அதில், தக்காளியை பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு மிக்ஸியில், சீரகம் மிளகு, பூண்டு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து தனியாக எடுத்து புளி கரைசலில் சேர்த்துக்கொள்ளவும். அடுத்து ஒரு பாணில், எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை, உப்பு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, புளி கரைசலை அதில் சேர்க்கவும்.
அடுத்து, கறி வேக வைத்த தண்ணீரையும் சேர்த்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மல்லி இலை சேர்த்து நுரை கட்டி வரும்போது இறக்கினால் சுவையான கறி தண்ணீர் ரசம் தயார். நீங்களும் வீட்டில் மட்டன் எடுக்கும்போது இந்த ரசத்தை ட்ரை பண்ணி பாருங்க.