மல்டி வைட்டமின் சத்து இந்த கீரையில் அதிகம்... பார்க்க கருவேப்பிலை மாதிரி இருக்கும்; இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

சரும பிரச்சனைகளைத் தடுக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நரம்புத்தளர்ச்சியை நீக்கி, நரம்புகளை பலப்படுத்தவும், உடல் சோர்வு மற்றும் அசதியை போக்கவும், மூளையின் செயல்பாடு மற்றும் சுறுசுறுப்புக்கு தவசி கீரை உதவுகிறது.

சரும பிரச்சனைகளைத் தடுக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நரம்புத்தளர்ச்சியை நீக்கி, நரம்புகளை பலப்படுத்தவும், உடல் சோர்வு மற்றும் அசதியை போக்கவும், மூளையின் செயல்பாடு மற்றும் சுறுசுறுப்புக்கு தவசி கீரை உதவுகிறது.

author-image
WebDesk
New Update
Porial Thavasi Keeral

மருத்துவ குணங்கள் நிறைந்த கீரைகளில் ஒன்று தவசி கீரை. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ மற்றும் கே போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும் அதில் அடங்கியுள்ளது. இந்த கீரையில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

Advertisment

மேலும் இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால், எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும். முதியோர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான பிரச்சனைகளுக்கும் இது நல்லது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு மிகவும் முக்கியமானது. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரித்து இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.

சரும பிரச்சனைகளைத் தடுக்கவும், சருமத்தை பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நரம்புத்தளர்ச்சியை நீக்கி, நரம்புகளை பலப்படுத்தவும், உடல் சோர்வு மற்றும் அசதியை போக்கவும், மூளையின் செயல்பாடு மற்றும் சுறுசுறுப்புக்கு தவசி கீரை உதவுகிறது. இந்த கீரையில், பொரியல், கூட்டு, சாம்பார் போன்ற பல்வேறு உணவு வகைகளில் செய்து சாப்பிடலாம். அந்த வகையில், தவசி கீரை பொரியல் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

Advertisment
Advertisements

தவசி கீரை – ஒரு கட்டு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – ஒரு கப்

பச்சை மிளகாய் – 3

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு

தேங்காய், பூண்டு, வரமிளகாய், சீரகம்

செய்முறை:

ஒரு வாணலில், எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து இதில், கழுவி சுத்தமாக வைத்துள்ள தவசி கீரையை சேர்த்து வதக்கவும். 

அதன்பிறகு தேவையான அளவு உப்பு அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, வேகவைத்து, இறுதியாக தேங்காய் துருவல், பூண்டு, வரமிளகாய், சீரகம் அரைத்து பொடியாக்கி கீரையில், சேர்த்து இறக்கினால் சுவையான தவசி கீரை பொறியல் ரெடி. 

Tamil Health Tips

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: