பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒரு உணவு உளுந்து. பெண்களின் ஹார்மோன் சுழற்ச்சிக்கு உளுந்து பெரிய அளவில் உதவி செய்கிறது. இதனால் உளுந்து களி, உளுந்து வடை, உளுத்தங்கஞ்சு, உளுந்து தோசை ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். இப்படி செய்யும்போது பெண்களுக்கு ஹார்மோன்கள் சீராகி, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
இப்போது உளுந்தை வைத்து லட்டு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
உளுத்தம்பருப்பு
Advertisment
Advertisements
நாட்டு சர்க்கரை,
பேரிட்சம் பழம்
ஏலக்காய்
நெய் –
முந்திரி
புழுங்கல் அரிசி
எள்
செய்முறை:
முதலில், உளுத்தம் பருப்பு, புழுங்கல் அரிசி, எள் இவை மூன்றையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இந்த கலவையில், நாட்டு சர்க்கரை, பேரிட்சம் பழம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கரு கடாயில் நெய் சேர்த்து அதில் முந்திரியை வறுத்து எடுத்து உளுந்துமாவு கலவையில் சேர்த்து பிசைந்து லட்டு மாதிரி உருண்டையாக பிடித்து எடுத்தால் சுவையான உளுந்தமாவு லட்டு தயார்.