உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சத்தான உணவுகள். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது உடலில் எவ்வித இன்னல்களும் இல்லாமல் இருக்கலாம். அதே சமயம் இயற்கை பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அதன் முழு ஊட்டத்தும் கிடைக்க வழி செய்யும். அந்த வகையில் எள் சிறந்த நன்மைகளை கொடுக்கும்.
எள் ஏன் முக்கியம்?
குளிர்கால உணவுகளைப் பற்றி நாம் பேசும்போது, எள் விதைகள் பரவலாகக் கொண்டாடப்படும் ஒரு உணவுப் பொருளாகும். டில் லட்டு முதல் சாலட் டாப்பிங் வரை, ஒவ்வொரு உணவு வகையிலும் ஏதாவது ஒரு வடிவில் இதைப் பயன்படுத்துகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, எள் ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இதயத்திற்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும் இதில் புரதம், மாங்கனீசு, வைட்டமின் ஈ, நிறைவுறா கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
சீன மருத்துவம் முதல் நமது சொந்த ஆயுர்வேதம் வரை அனைத்து நன்மைகளையும் உள்ளடக்கியுள்ள எள் விதைகள் நீரிழிவு, குடல் நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிக்க உதவுவதால், உடல் ஆரோகக்கியத்திற்கு சிறந்த உணவாக ஊட்டச்சத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஊட்டச்சத்து ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, எள் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன என கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி உணவில் எள்ளை ஏன் சேர்க்க வேண்டும்?
தினசரி உணவில் 2-3 தேக்கரண்டி எள் விதைகளை உட்கொள்வது லிப்பிட்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் எல்டிஎல் கொழுப்பை 8-16 சதவிகிதம் குறைக்கிறது மற்றும் மொத்த கொழுப்பை 8 சதவிகிதம் குறைக்கிறது.
எள் கொழுப்பை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது?
கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்துவதில் எள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எள்ளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், சிறுகுடலில் இருந்து கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுக்கவும், உடலில் கொலஸ்ட்ராலை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள ரிடக்டேஸ் என்ற நொதியின் செயல்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டே மாதங்களில் 3.6 மில்லி கிராம் எள் எல்டிஎல்லை 16% மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவை 8% குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், எள்ளில் காணப்படும் ஆல்பா-லினோலிக் அமிலம் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்க உதவுகிறது. எள்ளில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்த ஓட்டத்தில் கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுப்பதன் மூலம் இரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
உங்கள் அன்றாட உணவில் எள்ளை எப்படி சேர்ப்பது?
அதிக புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள எள் விதைகளை குளிர்காலத்தில் உட்கொள்வது சிறந்தது. இந்த விதைகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதற்கான சிறந்த வழி, அவற்றை முழு தானிய ரொட்டி மற்றும் மஃபினில் சேர்த்துசாப்பிடலாம்.சாலட் அல்லது சூப்பின் மேல் சில வறுத்த எள் விதைகளை சேர்த்து சாப்பிலாம். எள் விதைகளை கிரானோலா, பருப்புகள் மற்றும் பிற விதைகளுடன் கலந்து சிற்றுண்டியாக சாப்பிடுவதும் ஒரு நல்ல வழி. மேலும் குளிர்காலத்தில், நீங்கள் எள் விதைகளை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
எள்ளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அதனால் பக்கவிளைவுகளைத் தவிர்க்க உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் சான்றளிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil