குடல் புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்ட சின்ன வெங்காயத்தை வைத்து சுவையான மருந்து குழம்பு எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம்
கொத்தமல்லி – ஒரு டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் ஒரு டீஸ்பூன்
கடுகு ஒரு டீஸ்பூன்
சுக்கு ஒரு துண்டு
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, கறிவேப்பிலை, சீரகம், தாளிக்க,
மிளகாய் தூள், மஞ்சள் தூள்,
தக்காளி – 2
புளி – ஒரு நெல்லி அளவு
செய்முறை:
முதலில், கொத்தமல்லி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கடுகு, திப்பிலி, சுக்கு, ஆகியவற்றை நன்றாக வறுத்து பொடி செய்து வைத்தக்கொள்ளவும். அதன்பிறகு ஒரு பானில் எண்ணெய் வி்ட்டு, கடுகு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளித்து, அதில், வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன்பிறகு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அரைத்த தக்காளி பேஸ்டை சேர்த்து, கொதிக்க வைத்து, அதில் புளி கரைசலை சேர்க்கவும். இறுதியாக அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கினால் சுவையான மருந்து குழம்பு தயார். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.