இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக இருக்கும், நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி) காரணமாக அரிசி சாப்பாடு அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த சாதத்தை சரியான முறையில் செய்தால் அதில் இருக்கும் மாவுச்சத்து குறைவும் என்று மருத்துவ கூறியுள்ளார்.
Advertisment
மனித உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவு என்பது முக்கியமான ஒன்று. சத்தான உணவை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதே சமயம் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள, 3 வேளையும் ஒவ்வொரு வகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். நகரத்தில் காலையில், இட்லி தோசை, மதியம் சாப்பாடு, இரவில் சப்பாத்தி, தோசை, என 3 வேளையும் தனித்தனியாக உணவு சாப்பிடும் நடைமுறை இருக்கிறது.
அதே சமயம், கிராமத்தில், 3 வேளையும் அரிசி சாதத்தை சாப்பிடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால் சர்க்கரை நோய் தாக்கம் இருந்தால் அரிசி சாதம் சாப்பிட கூடாது என்ற நிலையும் உள்ளது. இதனால் என்ன உணவு சாப்பிடலாம் என்ற என்ற கேள்வியும் இருந்து வரும் நிலையில், அரிசி சாதத்தையே சரியான முறையில் செய்து சாப்பிட்டால், அதில் இருக்கும், மாவுச்சத்து குறையும் என்று டாக்டர் அருண்குமார் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
இன்றைய காலக்கட்டத்தில் சாப்பாடு குக்கரில் சமைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. கிராமத்தில் கூட இப்போது ப்ரஷர் குக்கரை பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது, இது தான் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாகவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், ப்ரஷர் குக்கரில் சமைக்காமல், சாதத்தை அடுப்பில் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் அதிகரிக்காதா? இப்படி சாப்பிடலாமா என்ற கேள்வியும் எழும்.
Advertisment
Advertisements
அடுப்பில் சமைத்து சாதத்தின் கஞ்சியை வடித்துவிட்டால், அதில் இருக்கும் மாசுச்சத்து பாதியாக குறைந்துவிடும். ஆனாலும் அரிசியில் உள்ள நுண் சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்றால், அரிசி வடித்த கஞ்சியை வெளியில் கொட்ட வேண்டிய அவசியம் இருக்காது. உடல் பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் உடலில், மாவுச்சத்தை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ப்ரஷர் குக்கருக்கு பதிலாக சாதத்தை அடுப்பில் வேகவைத்து அதன் கஞ்சியை வடித்துவிட்டு, சாதத்தை சாப்பிடலாம். இந்த முறையில் 15 சதவீதம் மாவுச்சத்து குறைவும்.
இலங்கையில் விஞ்ஞானிகள் கண்டறிந்த ஒரு ஆய்வில், அரிசியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து சமைத்து அந்த சாதத்தை 12 மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைத்து, அதன்பிறகு எடுத்து சூடு செய்து சாப்பிட்டுள்ளனர். இதன் மூலம், அரிசி சாதத்தில் உள்ள கலோரி பாதியாக குறைந்துவிடுகிறது. ஆனால் இது இலங்கையில் கிடைக்கும் ஒரு குறிப்பிட்ட அரிசிக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும் டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“