/indian-express-tamil/media/media_files/BdRIVl1lDDZC6cHhclAD.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை ரத்த அழுத்தம். இதனை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்போது உடலில் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் ரத்தம் அதிகம் அடர்த்தியாக, அதிக பிசுபிசுப்புத்தன்மை இருந்தால், இரத்தம் மெதுவாக ஓடும், இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
உடலில் ரத்த நாளங்களின் சுவர்களில் ரத்தம் பாயும் போது ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்கிறது. இது இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இது இரண்டு அளவுகளில் குறிப்பிடப்படுகிறது: இதயம் சுருங்கி ரத்தத்தை வெளியேற்றும் போது ஏற்படும் அழுத்தம். இது பொதுவாக சிஸ்டாலிக் அழுத்தம் என்று குறிப்பிடப்படுகிறது. இதயம் ரத்தத்தால் நிரம்பும்போது, தளர்வாக இருக்கும் நிலையில் ஏற்படும் அழுத்தம். இது டயஸ்டாலிக் அழுத்தம் குறிப்பிடப்படுகிறது.
உடல் பருமன், மன அழுத்தம், அதிக உப்பு உட்கொள்ளல், புகைபிடித்தல், மது அருந்துதல், உடற்பயிற்சியின்மை ஆகியவை உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவர, டாக்டர் கே. ஆர் அக்ஷயன் ஒரு ஜூஸ் பரிந்துரை செய்துள்ளார். இது குறித்து பேசியுள்ள ஒரு வீடியோவில், உங்களுக்கு நீண்ட நாட்களாக பிபி இருக்கிறது. அந்த பிபியை எப்படி கட்டுக்குள் கொண்டு வரணும் என்று தேடிக்கொண்டிருந்தால், இந்த ஜூஸை குடிககலாம்.
உங்களுடைய ரத்தத்தை சுத்திகரிக்க கூடிய ஒரு ஜூஸ். ரத்தம் அதோட அடர்த்தி அதிகமாக இருப்பதால் தான் உங்களுக்கு பிபி வருகிறது. ரத்தத்தில் உள்ள அடர்த்தியை குறைத்து சுத்தப்படுத்திவிட்டால், உங்க பிபி கண்ட்ரோல வரும். இதற்காக காலையில முதல் ஜூஸாக மாதுளை ஜூஸ் ரெடி பண்ணி, அதில், ஒரு நெல்லிக்காய், ரெண்டு புதினா சேர்த்து ஜூஸ் அடித்து தினமும் குடித்து வந்தால், உங்களுடைய பிபி கட்டுக்குள் வருவரத உங்களால கண்கூடாக பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.