நமது உடலில் கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். அது அதிகமானாலும் குறைவானாலும் நமக்கு பிரச்னை தான். சமநிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக உடலில் நல்ல கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் என இரு கொழுப்புகள் உள்ளன. நல்ல கொழுப்புகள் உடலுக்கு அவசியமானது. அதே சமயம் கெட்ட கொழுப்புகள் உடலில் இருந்து வெளியேறியே ஆக வேண்டும். அப்படி கெட்ட கொழுப்புகள் வெளியேறிவில்லை என்றால் பல பிரச்னைகள் வரும்.
Advertisment
குறிப்பாக ரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புகள் படியும்போது, இது இதயநோய்க்கு வழி வகுக்கும். ஒருவரின் உயரத்திற்கு ஏற்பட அவருக்கான உடல் எடை இருக்க வேண்டும். அதை விட அதிகமாக இருந்தால், அவருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் முடிந்த அளவுக்கு கார்போஹைட்ரெட் உணவுகள் சாப்பிடலதை தவிர்க்க வேண்டும். அதே சமயம், ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டியது அவசியம்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்க இந்த ட்ரிங்கை குடிக்கலாம். இதை எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை ஒரு டேபிள்ஸ்பூன்
சுக்குப்பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை பழம் – அரை
செய்முறை:
முதலில், வெந்தயம், சீரகம், கொத்தமல்லி, பட்டை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொண்டு, மிக்ஸியில் அரைக்கும்போது சுக்குப்பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு சொம்பு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இந்த பவுடரை ஒரு டீஸ்பூன் சேர்த்து, கொதிக்க வைத்து அதில் அரை எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து குடித்தால், கெட்ட கொழுப்புகள் வெளியேறும்.
அதேபோல் அருகம்புல், இஞ்சி, சேர்த்து மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்.