இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. இதனால் பல நோய் பாதிப்புக்கு உள்ளாகும் பலரும் உடல் எடையை குறைக்க, பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இப்படி இருப்பவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்க என்ன வழி என்று டாக்டர் கௌதமன் கூறியுள்ளார்.
Advertisment
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒரு சாதாரண மனிதனாக உடல் எடையைக் குறைப்பது எப்படி? உடல் எடையைக் குறைப்பதற்கு சில வழிமுறைகள் உள்ளன. உங்கள் உடல் எடை 50 கிலோவாக இருந்தால், அதில் 5 கிலோ உங்கள் உடலில் இருக்கும் கழிவுகள்தான். இது "டாக்சின்ஸ்" (toxins) எனப்படும். வருடத்திற்கு ஒருமுறை, ஆறு நாட்களுக்கு நெய் மருந்துகள் சாப்பிட்டு, ஏழாவது நாள் பேதிக்குச் சாப்பிடும் டீடாக்ஸ் முறையைப் பின்பற்றலாம்.
உங்கள் வாத, பித்த, கபத்தைப் பொறுத்து, முதல் நாள் 30 மில்லி, அடுத்த நாள் 45, பின்னர் 60, 75, 90, அடுத்து 105 மில்லி என ஆறு நாட்களுக்கு மருந்துடன் கூடிய நெய்யைச் சாப்பிட வேண்டும். ஏழாவது நாள் காலையில் பேதிக்கு ஒரு சுலபமான மருந்தை எடுத்துக்கொள்ளலாம். இது மிகவும் பாதுகாப்பானது. ஆண், பெண் இருபாலரும், 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 80 வயது வரையிலான பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதைச் செய்துகொள்ளலாம்.
முறையான மருத்துவ ஆலோசனை பெற்று செய்தால் மிகவும் நல்லது. இதை வருடத்திற்கு ஒரு முறை செய்யலாம். ஆறு நாட்கள் மருந்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து, பேதிக்கு எடுப்பதில் எனக்குப் பிரச்சினை இருக்கிறது, வேறு ஏதாவது ஒரு ஆலோசனை கொடுங்கள்" என்று நீங்கள் கேட்கலாம். மாதத்திற்கு ஒரு முறை ஒரு லேசான டீடாக்ஸ் செய்ய முடியுமா என்று பார்க்கலாம். இது ஒரு சிறிய டீடாக்ஸ்; அரை லிட்டர் எடுத்து கொய்யா இலை, மா இலை, வேப்பிலையை சேர்த்து 100 எம்.எல். வரும்வரை கொதிக்க வைக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த மாதிரி தண்ணீரை, மாதத்திற்கு ஒருநாள் காலையில் 5 மணிக்கு எழுந்து சாப்பிடுபவர்களும் உண்டு. அல்லது 40 நாட்களுக்கு ஒருமுறை என்று கணக்கு வைத்துச் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படிச் செய்தால், இதுவே ஒரு மென்மையான கழிவு நீக்கச் செயலாகச் செயல்பட்டு, உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.
இதன் மூலம் உங்கள் உடலில் ஒரு பெரிய மாற்றத்தை நீங்கள் காணலாம். புத்துணர்ச்சியுடனும், இளமையுடனும் இருக்கலாம். அந்த அளவிற்குப் பெரிய மாற்றத்தை, மாதம் ஒருமுறை நடக்கக்கூடிய இந்த எளிய கழிவு நீக்க முறை உங்களுக்கு அளிப்பதைக் காணலாம். மூன்றாவது, மிகவும் சுலபமான ஒன்று: மூன்று வேளை சாப்பிடும் உணவை இரண்டு வேளையாகக் குறைப்பது. இது மிகவும் எளிமையானது.