உடலுக்கு ஆரோக்கியம் தரும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்று தேன். இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஆண்டுகளாக தேன் உணவு பொருளாக நாம் சாப்பிட்டு வருகிறோம். தேனை சிறுவயதில் இருந்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, புற்றுநோய்க்கான பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
அதேபோல், தேன் உணவு மற்றும் பானங்களில் இனிப்புச் சுவையை சேர்க்கப் பயன்படுகிறது. இது ரொட்டி, தயிர், தேநீர் மற்றும் பல உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் தேன் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது காயங்களை ஆற்றவும், இருமலைக் குறைக்கவும், தொண்டைப் புண்ணுக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த தேனில், சில பொருட்களை கலந்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று தகவல்கள் உள்ளன. இந்த தகவல்கள் உண்மையா என்பது குறித்து, டாக்டர் கார்த்திகேயன் விளக்கியுள்ளார். சுடு நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து எலுமிச்சை சாறு சேர்த்து குடித்தால், உடல் எடை குறையும் என்பது பல ஆராய்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மிக்ஸிங் நமது உடலில் வெள்ளையணுக்களை அதிகம் உற்பத்தி செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஜீரண மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
Advertisment
Advertisements
அதே சமயம், எலுமிச்சை சாறு, தேன், சுடு தண்ணீர் சேர்ந்த கலவை கிட்னியை சுத்தப்படுத்தும், சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்யும் என்பது, இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அடுத்து முகப்பருக்கள் குறையும் என்று சொல்கிறார்கள். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கொழுப்புகளை கரைக்கும் என்று சொல்கிறார்கள். அதுவும் பொய்யான தகவல் தான் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.