வெயிட் குறைய விரதம் இருக்குறீங்களா? இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க: டாக்டர் இளவரசி
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், விரதம் இருந்தால் இவர்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து, டாக்டர், இளவரசி பட்டியலிட்டுள்ளார்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், விரதம் இருந்தால் இவர்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து, டாக்டர், இளவரசி பட்டியலிட்டுள்ளார்.
இனறைய காலக்கட்டத்தில இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, உடல் எடை அதிகரிப்பு. ஒரு நபரின் உடல் எடை அவர்களின் உயரத்திற்கு ஏற்ற எடையை விட அதிகமாக இருப்பது தான் உடல் எடை அதிகரிப்பு எனறு சொல்வார்கள். உடல் எடை அதிகரிப்பு பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதிகமாக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கும்.
Advertisment
அதிக கலோரிகள், கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை உட்கொள்வது மற்றும் போதுமான பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உட்கொள்ளாதது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். போதுமான உடற்பயிற்சி செய்யாதது கலோரிகளை எரிக்காமல் உடலில் கொழுப்பாக சேர வழிவகுக்கும். தைராய்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் சில மருந்துகள் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.
உடல் எடை அதிகரிப்பு காரணமாக பலவிதமாக நோய் தாக்கத்திற்கு ஆளாவார்கள். இதனால் உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்வார்கள் இதற்காக சாப்பிடாமல் விரதம் இருக்கும் நபர்கள் கூட இருக்கிறார்கள். அந்த வகையில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், விரதம் இருந்தால் இவர்கள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பது குறித்து, டாக்டர், இளவரசி பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி, 200 கிராம் வேக வைத்த காலிஃபிளவருடன், 100 கிராம் கடலை சட்னி சாப்பிடுவது சிறந்த உணவாக இருக்கும். காலிஃபிளவரை வேக வைத்து, அதனுடன், கடலை சட்னியை சேர்த்து சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு பப்பாளி, அல்லது, தர்பூசனியை சாப்பிடலாம். காலிஃபிளவரில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் ஃபைபர், மலச்சிக்கல் ப்ரச்னைக்கு தீர்வாக அமையும். தைராய்டு இருப்பவர்களும் காலிஃபிளவரை சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
குறிப்பாக காலிஃபிளவரை தண்ணீரில் போட்டு வேகவைக்க கூடாது. அப்படி செய்தால் அதில் இருக்கும் சத்துக்கள் போய்விடும். இட்லி பானையில் வைத்து வேக வைக்கலாம். அடுத்து கடலை சட்னியுடன், பிராக்கோலியை சேர்த்து சாப்பிடலாம். காலிஃபிளவரில் இருப்பது போன்று பிராக்கோலியிலும், வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஏ என 3 வகை சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ கண்ணுக்கு மிகவும் நல்லது. பிராக்கோலியுடன், கடலை சட்னி சேர்த்து உப்பு மிளகு தூள் சேர்த்து சாப்பிடலாம் என்று கூறியுள்ளார்.