நேஷ்னல் இன்ஸ்டியூட் ஆப் நியூட்ரிஷன் கூறியுள்ள உலகின் தலைசிறந்த 3 படங்கள், வாழைப்பழம், கொய்யப்பழம், மாதுளை பழம். இவை மூன்றும் தான். இதில் வாழைப்பழத்தை தினமும் ஏதாவது ஒரு வகையில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். தினமும் ஒரு வாழைப்பழம் அது என்னவாக கூட இருக்கலாம். ஏலக்கி, செவ்வாழை, நேந்திரம், பழம் மட்டிப்பழம் என எதுவாக இருந்தாலும் தினசரி உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதை வைத்து வாழைப்பழ மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் 1
பால் – ஒரு டம்பளர்
தேன் ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பழத்தை துண்டு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் பால் மற்றும் தேன் சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ மில்க் ஷேக் ரெடி.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியம். அதேபோல் நார்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, மூளையின் ஆரோக்கியத்திற்கும், மனநிலையை மேம்படுத்தவும், செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் உற்பத்திக்கும் துணைபுரிகிறது. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும், திசுக்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவும் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும்.
மெக்னீசியம், எலும்புகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.
இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கவும், உடலுக்கு ஆற்றலை வழங்கவும் உதவும். வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகின்றன. உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது மதிய உணவுக்குப் பிறகு சாப்பிடுவது நல்லது. வைட்டமின் C மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமம் சீக்கிரம் வயதாகாமல் தடுக்கவும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும் உதவுகின்றன.