/indian-express-tamil/media/media_files/2025/02/16/3SSJvsq06tt8YjMWbH8f.jpg)
பொதுவாக இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து நமது உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களை கட்டுப்படுத்தலாம். அந்த வகையிலான ஒரு மூலிகை தான் ஆடாதொடை இலை. இந்த இலையின் பயன்கள் குறித்து மருத்துவர் சிவராமன் தனது வீடியோவில் பேசியுள்ளார்.
சாதாரணமாக வேலிப்புறத்தில் வரும் ஒரு இலைதான் ஆடாதொடை இலை. இந்த இலையை ஆடு சாப்பிடாது அதனால் தான் இது ஆடாதொடை. இது மிகவும் அதிகமாக கசப்புத்தன்மை கொண்டது. இந்த இலைகளை ஆடு மேயவில்லை என்றாலும் மனிதர்களாகிய நாம் மேய வேண்டும். இதில் இருந்து ஒரு ஆல்க்லைடு பிரித்து எடுத்து தான் சளிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். தொண்டையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஆடாதொடை மிகவும் பயன் தரும் மூலிகையாக இருக்கிறது.
ஆடாதொடடை இலையை தண்ணீரில் போட்டு அதில், மிளகு சேர்த்து, தேநீர் போல் வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. மழைக்காலங்களில் வாரத்திற்கு 2 நாட்கள் இப்படி தேநீர் எடுத்துக்கொள்ளலாம். சளி இருமல் இதிகமாக இருந்தால், வாரத்தில் 3-4 நாட்கள் எடுத்துக்கொண்டாலும அதிக பலன் தரும். இரத்த தட்டுக்களை உயர்த்தும் தன்மை ஆடாதொடை இலைக்கு அதிகமாக இருக்கிறது.
டெங்கு காய்ச்சல் காலத்தில் பப்பாளி இலையில் சாறு எடுத்து சாப்பிடுவோம். இது இரத்த தட்டுக்களை உயர்த்தும் என்று சொல்வார்கள். ஆனால் பப்பாளி இலைகளை விட, ஆடாதொடை இலையில் அதகமான மருத்தவ நன்மைகளும், இரத்த தட்டுக்களை அதிகமாக உயர்த்தும் திறனும் இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டால், இதை குறைப்பதற்கும் ஆடாதொடை இலை பயன்படும். சாதாரணமாக ஆடு தொடாத கசப்பான, யாரும் கவனிக்காத அந்த இலை, அவ்வளவு மருத்துவ குணங்கள் உடையது.
ஆடாதொடை இலை, மிளகு, அதிமதுரம் ஆகியவற்றை சேர்த்து ஒரு தேநீர் வைத்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது. நளி இருமல் மட்டுமல்லாமல், வேறு ஏதெனும் சிறுசிறு தொற்றுகள் வராமல் தடுக்கவும் இந்த இலை பயன்படுகிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.