கீரைகள் என்றாலே நமது உடலுக்கு பல வகையாக ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது என்று பலருக்கும் தெரியும். அந்த வரிசையில் ஒரு கீரை தான் அகத்திக்கீரை. அமாவாசை தினம் என்றாலே, பலரும் அகத்திக்கீரையை கடைகளில் இருந்து வாங்கி மாட்டுக்கு கொடுத்து வருவார்கள். இது ஐதீகளம் புன்னியம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த அகத்திக்கீரையில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் அடங்கியுள்ளது என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
அகத்திக்கீரையில் வைட்டமின் A, C, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், துத்தநாகம், செலினியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. அகத்திக்கீரை எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. இது மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.
அகத்திக்கீரையில் இருக்கும் வைட்டமின்கள் உடல் சூட்டைக் குறைத்து கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும். அரிப்பு, சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நாள்பட்ட புண்கள் மீது அகத்திக்கீரையை அரைத்து தடவினால் விரைவில் ஆறிவிடும். இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகையை நீக்க உதவுகிறது. வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இதயத்திற்கு நல்லது. இது இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவதைத் தடுத்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது கணைய செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இன்சுலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. இந்த அகத்திக்கீரையை, உருவி சுத்தம் செய்து, வைத்துக்கொண்டு, ஒரு பாத்தித்தை அடுப்பில் வைத்து, அதில், பருப்பை வேக வைத்து, வெந்தவுடன், அகத்திக்கீரையை அதில் சேர்க்கவும். அதன்பிறகு ஒரு கடாயில், எண்ணெய் கடுகு, வெங்காயம், பெருங்காயப்பொடி, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் வேகவைத்த பருப்பு அகத்திக்கீரை கலவையை சேர்க்கவும்.
அடுத்து துருவிய தேங்காயை சேர்த்து சில நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையாக அகத்திக்கீரை பொறியல் ரெடி. நீங்களும். வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. இந்த அகத்திக்கீரை, ரத்தத்தை ஃபியூரிப்பைட் செய்யும். இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6 அதிகமாக இருக்கிறது. இந்த சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.