முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த வாழைப்பழம், சுவையாக இருப்பதோடு மட்டுமல்லமாமல், அதன் தோலும் மருத்துவ குணங்கள் நிறைந்தது என்று கூறியுள்ள டாக்டர் மைதிலி, தூக்கமின்மை, பிபி குறைய மன அழுத்தம் நீங்க, வாழைப்பழ தோலில் டீ வைத்து குடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
Advertisment
இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், வாழைப்பழ தோலில் மெக்னீசியம், பொட்டாசியம் 2-ம் இருப்பதால், பிபியை சராசரியாக வைக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாத வகையில் பாதுகாக்கும். அதேபோல் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை கொடுக்கும். வாழைப்பழ தோல் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால், அதனை நீங்குவதற்கு, எந்த வகையான வாழைப்பழமாக இருந்தாலும் சரி அதன் தோலை எடுத்துக்கொண்டு, அதன் உட்புற பகுதியை வைத்து முகத்தில் தேய்க்க வேண்டும். 3 நிமிடங்கள் இப்படி செய்துவிட்டு, 5 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன்பிறகு, சராசரியாக தண்ணீரில் குளித்தாலே அல்லது முகம் கழுவினாலோ, முகப்பரு, கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கும். இதை தொடர்ந்து 30 நாட்களுக்கு செய்ய வேண்டும்.
தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டும், முடி உதிர்வை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம். 3 வாழைப்பழ தோலை எடுத்துக்கொண்டு, தயிர் அல்லது கற்றாழை ஜெல் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து 45 நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இப்படி செய்யும்போது ஷேம்பு பயன்படுத்தாமல் சிகைக்காய் பயன்படுத்துவது நல்லது.
Advertisment
Advertisements
3 வாழைப்பழ தோலை எடுத்துக்கொண்டு 2 க்ளாஸ் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, ஒரு க்ளாஸ் அளவு வந்தவுடன், வடிகட்டி துவைப்பட்டால், பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இப்படி குடிக்கும்போது, இதில் மெக்னீசியம் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் பிபி சராசரியை பராமரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தூக்கமின்மையை சரி செய்யும். மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் இந்த வாழைப்பழ தேநீரை வாரத்திற்கு 2 முறை எடுத்துக்கொள்பவர்களுக்கு கண்பார்வை கூர்மையாகும் என்று டாக்டர் மைதிலி கூறியுள்ளார்.