வெயில் காலத்தில் விலை குறைவாக கிடைக்கும் சுரைக்காயில் அவ்வளவு சத்துக்கள் உள்ளன. குறிப்பாக, சுரைக்காயில் பல்வேறு மருத்துவ பயன்கள் அடங்கியுள்ளன. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும்.
சுரைக்காயில் வைட்டமின் பி, சி சத்துகளை கொண்டுள்ளது. நீர்சத்து 96.07 %, இரும்புச் சத்து 3.2%, தாது உப்பு 0.5 %, பாஸ்பரஸ் சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது.
அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. மேலும் நாவறட்சியை போக்கும். கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதைபகுதியை எரிச்சல் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த காயை அடிக்கடி பயன்படுத்தி வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும். வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.
சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும், வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது. மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சுரைக்காயின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து 0 அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம். இப்படி பல நன்மைகளை கொடுக்ககூடிய சுரைக்காய் குறித்து பொதுவெளியில் ஒரு பழமொழி இருக்கிறது.
சுரைக்காயில் உப்பு இல்லை என்று சொல்வார்கள். அது உண்மையும் கூட. சுரைக்காய் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் உப்பை எடுத்துவிடும். சுரைக்காயை துண்டு துண்டாக நறுக்கி, வைத்துக்கொண்டு ஒரு வாணலில் எண்ணெய் விட்டு, கடுகு, வெங்காயம், கடலைகப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் சேர்த்து சுரைக்காயை வதக்கி வேக வைக்கவும். சுரைக்காய் நன்றாக வெந்தவுடன், அதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டலாம். இந்த சுரைக்காய் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது என இயற்கை விவசாயி நம்மாழ்வார் கூறியுள்ளார்.