மாறி வரும் மனிதனின் உணவு முறை காரணமாக இளைஞர்கள் பலரும் இன்று இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலான இளைஞர்கள் இந்த நோய் தாக்கத்தை சந்தித்து குறைவான வயதிலேயே மரணத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க, இதயத்திற்கு தேவையான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியவது அவசியம். எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
பால் சாப்பிடுவது இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை உண்டாக்குமா என்ற கேள்வி தற்போதும் இருந்து வருகிறது. பால் சாப்பிடுவதால், நன்மையும் இருக்கிறது. அதே சமயம் கெடுதலும் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் அவசியம் இல்லாமல் அதிகமான பால் எடுத்துக்கொள்வது தேவையில்லாதது. அதேபோல் தினமும் இரவில் படுக்க செல்லும்முன் பால் குடிப்பது அவசியம் இல்லாத ஒன்று. குழந்தைகள் சாப்பிடாதபோது ஒரு டம்பளர் பாலையாவது குடி என்று சொல்வார்கள் அதுவும் அவசியம் இல்லாதது தான்.
பால் பொருட்களில் மோர் தவிர மற்ற அனைத்துமே தேவையில்லாத ஒன்று தூன் மோர் மட்டுமே இதய நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. தேநீர் சிறப்பான மருத்துவ குணம் அதிகம் உடையது. ஆனால் அதனுடன் பால் சேர்த்தால் அதன் மருத்துவ குணம் மாறிவிடும். அதனால் தேநீர் குடித்தால் கூட அதில் பால் சேர்க்காமல் குடித்து பழகிக்கொள்ள வேண்டும். அதேபோல் எண்ணெய் பொருட்களை அதிகம் சேர்க்க கூடாது என்று சொல்வார்கள். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு பரிந்துரை செய்வார்கள்.
Advertisment
Advertisements
தேங்காய் எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. அதேபோல் தேங்காய பாலில் இருக்கக்கூடிய சத்து இதய நோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய எண்ணெய்களில் இருந்த மோகம் தான், தேங்காய் எண்ணெய் பற்றிய சிந்திக்க விடாத அரசியலை செய்துள்ளது. ஆனால் தேங்காய் எண்ணெய் உடலுக்கு நல்லது. குறைந்த அளவிலான தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. அதேபோல் கடுகு எண்ணெயில் ஒமேகா3 சத்து இருக்கிறது. அதை விட்டுவிட்டு விலை மலிவாக கிடைக்கக்கூடிய தவிட்டு எண்ணெயை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.