உடம்பில் திடீர் அலர்ஜி... பாட்டி சொன்ன வைத்தியம்; இந்த ஜூஸ் கொஞ்சம் குடிச்சுப் பாருங்க!
கறிவேப்பிலையில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் C, வைட்டமின் A, B, B2, E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
கறிவேப்பிலையில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் C, வைட்டமின் A, B, B2, E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
பொதுவாக ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நமது உடலுக்கு ஏதாவது ஒரு வகையில், பாதிப்பு ஏற்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை பார்க்கலாம். குறிப்பாக உடல் அலர்ஜி என்பது பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை. வெயில் காலங்களில் இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய கறிவேப்பிலை சாறு உதவும் என்பது பலரும் அறிந்திராத ஒரு உண்மை.
Advertisment
தென்னிந்தியா சமையலில் ஒரு முக்கியப் பொருளாக கறிவேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உணவுக்கு மணம் சேர்ப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் C, வைட்டமின் A, B, B2, E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் கறிவேப்பிலைக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைக்கும் செயல்முறையை மெதுவாக்கி, இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கறிவேப்பிலையில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. ஃபோலிக் ஆசிட் உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் இரத்த சோகை போன்ற பிரச்சனைகளைக் குறைக்க கறிவேப்பிலை பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலை செரிமான நொதிகளைத் தூண்டி, உணவை திறமையாக உடைக்க உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளைத் தணிக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும் உதவும். இது ஒரு லேசான மலமிளக்கியாகவும் செயல்படும்.
கறிவேப்பிலையில் உள்ள புரதம் மற்றும் பீட்டா-கரோட்டின் சத்துக்கள் முடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். நரை முடி வருவதையும் தடுக்கும். சருமத்தைப் பொலிவாக்கவும் உதவும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது பார்வை குறைபாடுகளைத் தடுக்கவும், முதுமையில் ஏற்படும் கண் புரை நோயின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
Advertisment
Advertisements
குறிப்பாக, கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். துருவிய தேங்காய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதனை வடிகட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடும்போது, உடலில் அலர்ஜி ஏற்படுவதை தடுக்கும்.