இனிப்பு சாப்பிட்ட பிறகு தண்ணி குடித்தால் 'சுகர்' குறையுமா? டாக்டர் செல்வ சண்முகம் 'நச்' பதில்
நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, பீட்சா, பர்கர், சிக்கன் ரைஸ், உள்ளிட்ட துரித உணவுளை நோக்கி அதிகம் பயணித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோயும் சீக்கிரம் வந்துவிடுகிறது.
நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, பீட்சா, பர்கர், சிக்கன் ரைஸ், உள்ளிட்ட துரித உணவுளை நோக்கி அதிகம் பயணித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோயும் சீக்கிரம் வந்துவிடுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருவதால், பல விதமாக பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். நமது பாரம்பரிய உணவுகளை மறந்து, பீட்சா, பர்கர், சிக்கன் ரைஸ், உள்ளிட்ட துரித உணவுளை நோக்கி அதிகம் பயணித்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோயும் சீக்கிரம் வந்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் பலரும் முதுமையில் வரக்கூடிய நோய்களை இப்போதே சந்தித்து வருகின்றனர்.
Advertisment
இதனை தடுக்க முடியாது என்றாலும் இதில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்பது பல மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனாலும், இளைஞர்கள் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறார்கள் என்பது தான் உண்மை. அதேபோல் இந்த மாதிரியான துரித உணவுகளை சாப்பிட்டுவிட்டு, வாரம் ஒருமுறை பட்டினி கிடந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறத. இதனை பலரும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்த நடைமுறை உண்மையா என்பது குறித்து, டாக்டர் செல்வ சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இந்த மாதிரி துரித உணவுகளை சாப்பிட்டுவிட்டு வாரம் ஒருமுறை பட்டினி இருந்துகொள்கிறேன் என்று சொல்பவர்களால் அவ்வாறு இருக்க முடியாது. இந்த மாதிரி தவறான உணவுகளை சாப்பிடும்போது அதனால் வரும் பிரச்னைகளை நீக்கும் ஆற்றல் பட்டினிக்கு உண்டு. ஆனால் இதில் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அதிகம் சாப்பிட்டுவிட்டு ஏன் பட்டினி இருக்க வேண்டும்?
இப்படி வாரந்தோறும் அதிகம் சாப்பிடுபவர்கள் ஒரு நாள் பட்டினி இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். பட்டினி என்பது உடலும் மனதும் சேர்த்து செய்யக்கூடிய ஒரு விரதம். நல்ல செயல்களுக்காக இது இருந்தால் ஓகே. ஆனால் நான் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுவேன் வாரம் ஒருமுறை பட்டினி இருந்து இதனை சரி செய்துகொள்வேன் என்று சொன்னால் அது முடியவே முடியாது. பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகள், 5 ஜாங்கிரி சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் சுகர் ஏறாது என்று சொல்வார்கள்.
Advertisment
Advertisements
இது மிகவும் தவறான ஒரு செயல். 5 ஜாங்கிரி சாப்பிட்டு விட்டு ஒரு சொம்பு தண்ணீர் குடிப்பது, ஒரு மெட்ஃபார்மினுக்கு பதிலாக மற்றொரு மாதிரியும் சேர்த்து போட்டுக்கொள்வது தவறான செயல் என்று டாக்டர் கூறியுள்ளார்.