/indian-express-tamil/media/media_files/2024/12/16/yqZzQ3h8CFFRsCBBxPJ9.jpg)
இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மசாலா பொருட்களில் ஒன்று வெந்தயம். சமையலுக்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் வெந்தயம் முக்கிய பயனை கொடுக்கிறது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற வேதிப்பொருட்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகின்றன. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் இருக்கிறது,
வெந்தயம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரிக்கவும் உதவக்கூடும். பாலூட்டும் தாய்மார்களுக்கு வெந்தயம் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மாதவிடாய் வலி மற்றும் பிற அசௌகரியங்களை குறைக்க உதவும் என்று பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவும்.
வெந்தயத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். வெந்தயத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், இது உடலில் உள்ள செல்களுக்கு சேதம் விளைவிக்கும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. பல மருத்துவ குணங்கள் நிறைந்திருந்தாலும், வெந்தயம் குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் பயன்பதரக்கூடியதாக இருக்கிறது என்று பல மருத்துவர்கள் சொல்கிறார்.
அதே சமயம் தினமும் எந்த அளவில் வெந்தயத்தை எடுத்துக்கொண்டால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும் என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார். வெந்தயத்தில் கெலக்டோமான் என்ற முக்கியமான வேதிப்பொருள் இருக்கிறது. அடுத்து செபோனின்ஸ், 4ஹைட்ராக்ஸி ஐசோலியூஷன் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளது. இதில், 4ஹைட்ராக்ஸி ஐசோலியூஷன் உடலில் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது.
முதல்நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு மெட்ஃபார்மின் என்ற மாத்திரை கொடுக்கப்படுகிறது. இந்த மாத்திரைக்கு நிகரான சர்க்கரையின் அளவை குறைக்க வேண்டும் என்றால், சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 20-25 கிராம் வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்தயத்தில் இருக்கும் கெலக்டோமான் விரைவில் பசியை அடக்கும் தன்மை கொண்டது. இதில் குறிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியது மெட்ஃபார்மின் என்பது முதல் நிலை மருத்து மட்டும் தான். ஆரம்ப கட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும்தான் இந்த மெட்ஃபார்மின் ஓரளவு வேலை செய்யும். அடுத்தக்கட்ட நோயாளிகளுக்கு வேலை செய்யாது என்று டாக்டர் அருண்குமார் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.