இன்றைய காலக்கட்டததில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை சர்க்கரை வியாதி. இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கட்டப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். அதே சமயம், வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிய நன்மையை கொடுக்கும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
வெந்தயத்தைப் பச்சையாகவும் சாப்பிடலாம். இதன் கசப்புச் சுவை சிலரை, குறிப்பாக குழந்தைகளை முகம் சுளிக்கச் செய்யும். ஆனால் இதனை வறுத்துப் பயன்படுத்தும்போது இதன் கசப்பு குறையும். உணவின் சுவையும் கூடும். வெந்தயம், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. நீரிழிவு நோயாளிகளின் ரத்தச்சர்க்கரை அளவைக் குறைக்கக்கூடியது. கெட்ட கொழுப்பைக் குறைக்கக் கூடியது. சிறுநீரைப் பெருக்கக் கூடியது.
பசியைத் தூண்டக்கூடியது. நரம்புகளைப் பலப்படுத்தக் கூடியது. சீதபேதி, பைல்ஸ் எனப்படும் மூலநோய், உடல் சூடு, நீர்க்கடுப்பு போன்ற பல பிரச்னைகளையும் கட்டுப்படுத்தக் கூடியது. வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள், ரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தினசரி வெந்தயத்தை ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக் கொள்ளலாம். தினமும் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தைப் பச்சையாகவோ, அல்லது பொடித்தோ எடுத்துக் கொள்ளலாம்.
இரவில் ஊறவைத்து காலையில் அந்த நீருடன் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம். அந்த நீரை அருந்துவதால் சளி பிடிக்காது. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்த விழுதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம் குறைந்து முடி உதிர்வு கட்டுப்படும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். தலைமுடியின் கருமை நிறம் அதிகரிக்கும். கண்களுக்கும் குளிர்ச்சி தரும். தலைச்சூடு நீங்கும்.
Advertisment
Advertisements
வெந்தயத்தில் மட்டும் தான் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து என இரண்டுமே இருக்கிறது. இதில் கரையும் நார்ச்சத்து இதயநோய் வராமல் தடுக்கும். அதே சமயம், கரையாத நார்ச்சத்து உடலில் மலத்தை வெளியேற்றும். தற்போது நாம் பயன்படுத்தும் தானியங்களில் வெந்தயம் மட்டும்தான் ஆக சிறந்த தானியம். இதனை வறுத்து பொடி செய்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி உணவில் ஒரு டீஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு மல்லச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும் வல்லமை வெந்தயத்திற்கு உண்டு. தினமும் 10கி வெந்தயம் எடுத்துக்கொண்டால் உடலுக்கு கசப்பும் கிடைக்கும் மலமும் வெளியேறும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.