ஏழைகளின் பெனிசிலின் மருந்து... பூண்டை இனி இப்படி சாப்பிடுங்க: டாக்டர் ஐசக் அப்பாஸ்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் பண்புகள் உள்ளன. செரிமானத்திற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் பண்புகள் உள்ளன. செரிமானத்திற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய உணவு பொருட்களில் பூண்டும் ஒன்று. பொதுவாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் பொருட்களில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அந்த வகையில், பூண்டு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. பூண்டு உடல் கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஃபங்கல் பண்புகள் உள்ளன. செரிமானத்திற்கு உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Advertisment
இந்த பூண்டின் மருத்தவ குணம் குறித்து டாக்டர், ஐசக் அப்பாஸ் கூறுகையில், இது வெள்ளை பூண்டு இல்லை. இது ஒரு இயற்கையான கொலஸ்ட்ரால் மாத்திரை. இதனை பச்சையாக உட்கொள்பவர்களுக்கு, கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட்களின் அளவு, ஓரிரு மாதங்களிலேயே குறையும். இந்த வெள்ளைப் பூண்டினை நன்றாக நசுக்கும் போது, அதில் உள்ள ஆலின் மூலக்கூறு, ஆலிசின் என்ற வேறொரு மூலக்கூறாக மாறும்.
அந்த ஆலிசின் மூலக்கூறோ, ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலினை, பைல் திரவமாக மாற்றி, குறைத்துவிடும். ப்ரிவன்ஷன் ஆப் எல்டிlல் ஆக்சிடேஷன் எனில் கெட்ட கொலஸ்ட்ரால் இருக்கிறது. அவை ரத்த குழாய்களில் ஒன்று சேர்ந்து அடைப்பினை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும். இதனால் மாறடைப்பு ஏற்படும் வாய்ப்புகளும் குறையும். ஸ்டாட்டின் போன்ற கொலஸ்ட்ரால் மாத்திரைகள் ஹச்எம்ஜி கோயல் ரெடக்டேஸ் என்ற ஒரு நொதியினை கட்டுப்படுத்தி தான் கொலஸ்ட்ரால் அளவினை குறைக்கின்றன.
இந்த ஆலிசின் மூலக்கூறும் இதே செயல்முறையின் மூலம் கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. ஆனால் இதனை சமைத்து உண்ணும் போது இவ்வளவு பயன்கள் நமக்கு கிடைக்காது. காரணம் சமைக்கும் போது உண்டாகும் அந்த வெப்பத்தால் இந்த ஆலிசின் மூலக்கூறு உருவாகாது. இரண்டாம் உலக போரின் போது பெனிசிலின் மருந்துகளில் பற்றாக்குறை ஏற்பட்டது. அவ்வேளையில் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களில் வெள்ளை பூண்டினையே நசுக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Advertisment
Advertisements
இந்த வெள்ளை பூண்டினை ஒரு ஏழையின் பெனிசிலின் மருந்து எனவும் வீரர்கள் அழைத்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இயற்கையில் கிடைக்கும் முக்கிய உணவு பொருட்களில் ஒன்றாக இருக்கும் பூண்டு, மனித உடலில் பல்வேறு நோய்களுக்கு தீர்வு தருவதாக இருக்கிது என்பது குறிப்பிடத்தக்க்து.