ஒரு மனிதனின் உடல் சீராக இயங்குவதற்கு இரும்புச்சத்து அவசிமான ஒன்று. இதனால் நாம் உண்ணும் உணவுகளில் அதிக இரும்புச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் அரிசியை விட, 8 மட்ங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருள் கம்பு என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
பாரம்பரிய சிறுதானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் கம்பு, அரிசி மற்றும் கோதுமைக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ம்புவில் புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள அதிக இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கவும், இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.
அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி இருப்பதால், இது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த உணவாகும். இதில் உள்ள கரையாத நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. கம்புவில் குறைந்த கிளைசெமிக் குறியீடு இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக கோடை காலத்தில், கம்பு கூழ் அருந்துவது உடல் சூட்டைக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கிறது.
கம்புவில் உள்ள மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்றைக்கும் பள்ளிகளில் 40-50 சதவீதம் குழந்தைகள் ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். எவ்வளவு தான் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுத்தாலும், மற்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலும், இரும்புச்சத்து குறைபாடு என்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் பல பெண்களுக்கு தங்கள் திருமண வயதை எட்டி, குழந்தை பேறுக்கு போகும்போது தான் தங்களுக்கு அனிமீயா இருப்பது தெரிகிறது.
Advertisment
Advertisements
அப்போது அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது இதனால் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இரும்புச்சத்து குறைபாட்டை தீர்ப்பதற்கு, நம் முன்னோர்கள் சொன்ன ஒரு விஷயம் கம்மஞ்சோறு. கம்புவில் அரிசியை விட 8 மடங்கு இரும்புச்சத்து அதிகம். வரத்திற்கு ஒருநாள் தினை அரிசியில் பொங்கல், ஒருநாள் வரகு அரிசியில் சாப்பாடு, கம்மஞ்சோறுடன் மோர் கலந்து சாப்பிடும்போது, பல நன்மை செய்யும் கனிமங்கள் நமக்கு கிடைக்கும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.