/indian-express-tamil/media/media_files/2025/01/23/LcsmMZhdOuA2nQsWEXfm.jpg)
பொதுவாக கீழாநெல்லி என்ற மூலிகை அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த கீழாநெல்லி பொதுவாக மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்திருப்போம். ஆனால், காமாலைக்கு மட்டும் இல்லாமல் 10-க்கு மேற்பட்ட நோய்களை போக்குவதற்கு கீழாநெல்லி பயன்படுகிறது. இது குறித்து, டாக்டர் ஜோன்ஸ் செங்கோட்டையன் தனது வீடியோவில் கூறியுள்ளார்.
பொதுவாக கீழாநெல்லி கிராமம், நகரம் என எந்த இடமாக இருந்தாலும் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்டது. காமாலைக்கான அருமருந்து கீழாநெல்லி என்றாலும் கூட அது மட்டுமல்லாமல், பிற நோய்களுக்கும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். கீழாநெல்லிச் செடியை வேருடன் எடுத்து பொடி செய்து, காலை 5 கிராம் மற்றும் மாலை 5 கிராம் என 300 மில்லி தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இவ்வாறு குடிக்கும்போது, உடலில் ஏற்படும் அரிப்புகள், ஆண் பெண் இருவருக்கும் ஏற்படக்கூடிய அனிமியா எனப்படும் ரத்தசோகை நோய், குணமாகும். ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். இரத்த்தை விருத்தியாக்கும். வேறு நோயால் பாதிக்கப்பட்டு உடல் பலவீனமாக இருந்தாலும், இந்த கீழாநெல்லி பொடி வைத்து செய்த கஷாயம் உடலை பாதுகாப்பாக வைக்கும். பசியின்மை, வயிறு மந்தம், வயிறு உப்பசம் ஆகியவற்றை தீர்க்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
இந்த பொடியை இதே முறையில் 7 முதல் 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். சில மாதங்களுக்குப் பிறகு தேவைப்பட்டால் மீண்டும் இதை எடுத்துக்கொள்ளலாம். முழுமையாகப் பயன்படுத்தினால் தான் இதன் முழுப் பலனையும் பெற முடியும். காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள், அல்லது கல்லீரல் சோதனை முடிவுகள் இயல்புக்கு மாறாக உள்ளவர்கள் கீழாநெல்லியைப் பயன்படுத்தலாம்.
மது அருந்துபவர்கள் தங்கள் சிறுநீரகங்களைப் பாதுகாக்க வேண்டும். ஹெபடைட்டிஸ் உள்ளவர்கள் கூட சிறுநீரகத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். இது கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய், ஹெபடைட்டிஸ் B அல்லது C போன்ற தொற்று நோய்கள் உள்ளவர்களுக்கு உதவும். கீழாநெல்லி இலைகளை எடுத்து அதை நன்று அரைத்து ஒரு சில சொட்டுகள் எலுமிச்சை சாறு சேர்த்து, காலை வெறும் வயிற்றில், எருமைப்பால் தயிருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்துக்கொள்ளலாம்.
கீழாநெல்லியை உலர்ந்த காய்ச்சல், வெள்ளை முடி, வெள்ளை தோல், கருப்பை காய்ச்சல், ஆண்களின் காய்ச்சல், கண் எரிச்சல், காய்ச்சலுடன் கூடிய நோய்கள், மற்றும் வெப்பத்தை சமன் செய்யும் நோய்களுக்குப் பயன்படுத்தலாம். இதற்காக கீழாநெல்லி வேரை எடுத்து உலர்த்தி பொடி செய்து, 5 கிராம் காய்ந்த பொடியை எடுத்து, அதை 300 மில்லி நீரில் கொதிக்க வைத்து 3 முதல் 7 நாட்கள், தயிர் அல்லது மோருடன் குடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.