நரம்பை இரும்பு போல் மாற்றும் இந்தக் கீரை... இப்படி செய்து சாப்பிடுங்க: மருத்துவர் சிவராமன்
கீரைகள் நரம்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மணத்தக்காளி, முருங்கை, பசலை, பொன்னங்கன்னி உள்ளிட்ட எந்த கீரையாக இருந்தாலும் அதில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
கீரைகள் நரம்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மணத்தக்காளி, முருங்கை, பசலை, பொன்னங்கன்னி உள்ளிட்ட எந்த கீரையாக இருந்தாலும் அதில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
பொதுவாக மனித உடல ஆரோக்கியத்திற்கு கீரைகள் முக்கிய உணவாக இருக்கிறது. தினமும் ஒரு கீரை எடுத்துக்கொள்வது, உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். கீரைகள் நரம்புகளுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. மணத்தக்காளி, முருங்கை, பசலை, பொன்னங்கன்னி உள்ளிட்ட எந்த கீரையாக இருந்தாலும் அதில் நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
Advertisment
இந்த கீரைகள் நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டதால், தினசரி உணவில் எதாவது ஒரு வகையில் கீரைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக மணத்தக்காளி கீரையை, தேங்காய் பால், சிறுபருப்பு சேர்த்து, குழம்பு மாதிரி செய்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மணத்தக்காளி கீரை எப்படி செய்வது என்பதை பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
பாசி பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 7
பூண்டு - 10 பல்
பச்சை மிளகாய் – 5
தக்காளி – 1
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
மணத்தக்காளி கீரை - 3 கைப்பிடி அளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முதலில், பாசிப்பருப்பு மற்றும கடலைப்பருப்பை ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவிவிட்டு, அதில், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து, இவை அனைத்து மூழ்கும்வரை தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பருப்பு தக்காளி கலவை நன்றாக வெந்தவுடன், அதை ஒரு வாணலில் மாற்றி கொதிக்க வைத்து, அதில் மணத்தக்காளி கீரையை சேர்த்து வேக வைக்கவும். கீரை நன்றாக வெந்தவுடன், அதில் ஒரு மண்சட்டியில் கடைந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில், எண்ணெய், தாளிப்பு வடகம், சின்ன வெங்காயம், வரமிளகாய் சேர்த்து தாளித்து கொட்டி கடைந்து எடுத்தால் சுவையான மணத்தக்காளி கீரை ரெடி.