மாறி வரும் மனிதனின் உணவு முறை காரணமாக இளைஞர்கள் பலரும் இன்று இதய நோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெரும்பாலான இளைஞர்கள் இந்த நோய் தாக்கத்தை சந்தித்து குறைவான வயதிலேயே மரணத்தை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க, இதயத்திற்கு தேவையான சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியவது அவசியம்.
Advertisment
அந்த வகையில் இதய நோயை கட்டுப்படுத்தவும், உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முருங்கை பிசினை எப்படி பயன்படுத்தலாம் என்று டாக்டர் கௌதமன் கூறியுள்ளார். பல நோய்களை தீர்க்கக்கூடிய ஒரு அருமருந்து தான் முருங்கை பிசின். முருங்கை மரத்தை வெட்டும்போது நன்கு வளர்ந்த ஒரு மரத்தில காயங்கள் படும்போதும் அதில் இருந்து பிசின்கள் வழியும். இந்த பிசின் நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு இருந்த பிசின் சிறப்பான ஒரு மருந்து.
முருங்கை பிசினை ஒரு கிராம் அல்லது 2 சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் ஊறவைத்தோ, தேனில் கலந்தோ சாப்பிடும்போது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இந்த முருங்கை பிசினில் ஆண்டிஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. பொதுவாக சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய், இரத்த குழாயில் உள்ள கொழுப்புகள், தீர்க்க முடியாத வகையில் உள்ள புற்றுநோயாக கூட இருந்தாலும், ஆண்டிஆக்ஸிடன்ட் இருக்கக்கூடிய உணவுகளை எந்த அளவுக்கு உணவில் சேர்க்கிறோமோ, அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
Advertisment
Advertisements
உடலுக்கு தேவையான இந்த ஆண்டிஆக்ஸிடன்ட் தண்ணீர் அல்லது தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். அதேபோல் நெய்யிலும் ஊறவைத்து சாப்பிடலாம். இதில் இருந்து கிடைக்கும் ஆண்டிஆக்ஸிடன்ட் நமது உடல் பலம் பெற உதவுகிறது என்று டாக்டர் கௌதமன் கூறியுள்ளார்.