வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட பழமாக இருக்கும் ப்ளூ பெர்ரியில், அதிக அளவில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் (குறிப்பாக ஆந்தோசயனின்கள்) உள்ளன. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களின் பாதிப்பிலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. இது புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், முதுமையைத் தாமதப்படுத்தவும் உதவும். அதேபோல், ரத்த சர்க்கரை, இதய நோய் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க இந்த ப்ளூ பெர்ரி பழம் உதவு என்று சொல்லப்படுகிறது.
Advertisment
இந்த பழம் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது என்றாலும், இதை விட அதிக சத்துக்கள் நிறைந்தது நம்ம ஊர் நாவல் பழம் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், ப்ளூபெர்ரி எங்கயாவது கிடைக்குமா என்பது பலரும் தேடுகிறார்கள். அந்த ப்ளூபெர்ரி கேன்சர் வராமல் தடுக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். அந்த ப்ளூ பெர்ரியில் இருக்கும் சத்துக்களை விட, நம்ம ஊர் நாவல் பழத்தில் அதிக சத்துக்கள் இருக்கிறது.
நாவல் பழத்தில், ப்ளூபெர்ரியை விட அதிக அளவு பீனாலிக் காம்பவுண்ட் இருக்கிறது. இதனால் தான் நாவல் பழம் சாப்பிடும்போது வாய் எல்லாம் ப்ளூ ஆகிறது. அந்த நிறமி சத்து உடலுக்கு எதிர்ப்பாற்றலையும் புற்று நோயையும் தடுக்கக்கூடிய பீனாலிக் பாலிபினால் கண்டென்ட்ட தான் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். அதேபோல் நாவல் பழம், குறிப்பாக அதன் விதைகள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த பழமாகக் கருதப்படுகிறது.
Advertisment
Advertisements
நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகையைத் தடுக்க உதவும். நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை சரிசெய்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்தும். நாவல் பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.