பொதுவாக வேலிகளில் அதிகம் வளரும் சங்குப்பூ பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகைச் செடியாகும். இதன் இலைகள், வேர்கள், மலர்கள் மற்றும் விதைகள் அனைத்தும் மருத்துவப் பயன்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. சங்குப்பூவில் உள்ள சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தி, ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
இது மன அழுத்தம், பதட்டம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவும். சங்குப்பூ டீயில் காஃபின் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி, குடலைச் சுத்தப்படுத்தி, பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
இப்படி பல நன்மைகளை கொடுக்கும் சங்குப்பூவில் டீ வைத்து குடிக்கலாம் தெரியுமா? எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சங்குப்பூ – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு
இஞ்சி – 2 துண்டு
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து சங்குப்பூவை அதில் சேர்க்கவும். பூ நன்றாக வெந்து தண்ணீர் கலர் மாறும். அதன்பிறகு இஞ்சியை தட்டி அதில் சேர்க்க வேண்டும். இறுதியாக அதனை எடுத்து வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு செய்யும்போது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
சங்குப்பூவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து, சருமம் இளமையாகவும் பொலிவாகவும் இருக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ சாறு கல்லீரலை பலப்படுத்த உதவுகிறது. சங்குப்பூவின் வேர் சிறுநீரை சீராக வெளியேற்றவும், சிறுநீர்ப் பாதை தொற்றுகளை சரிசெய்யவும் உதவும்.