உடலில் ஏற்படும் ஒவ்வொரு நோய்க்கும் இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள் பழங்கள மற்றும் கீரை வகைகளில் அதற்கான மருத்துவங்கள் இருக்கிறது. அந்த வகையில், நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சுண்டைக்காய் குறித்து எப்போதும் யோசித்ததே கிடையாது. சுண்டைக்காய் உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஊட்டச்சத்து அவசியம் என்றாலும், அதில் முக்கியமானவர் இரும்புச்சத்து. இந்த இரும்புச்சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால், பேரிட்சம் பழம் அதிகம் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பேரீட்சம் பழத்தையும் தாண்டி, காய்கறிகள் கீரைகளில் அதைவிட அதிகமான இரும்புச்சத்துகள் இருக்கிறது. அந்த வகையிலான ஒரு காய் தான் சுண்டைக்காய்.
உடல் ரத்தம் சீராக தூய்மையாக இருந்தால் தான் நாம் சீராக இயக்க முடியும். அதற்கு ரத்த ஹீமோகுளோபின் ரொம்பவும் முக்கியமானது. உடலில் இந்த ஹீமோகுளோபினை அதிகரிக்க, பல வழிகள் இருந்தால் எளிமையான முறையில் அதிகரிக்க சுண்டைக்காய் பெரிய உதவியாக இருக்கும். உடலுக்கு தேவையான சத்துக்கள் தரக்கூடிய முக்கிய காய்கறிகளில் ஒன்றாக இருக்கும் சண்டைக்காய்யை நாம் ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/01/22/Nc52YvUlnC2Y7zMDGJyU.jpg)
அதே சமயம் சுண்டைக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. சுண்டைக்காயை உடைத்து வெளியில் வைத்தால் சிறிது நேரத்தில் கருப்பாகிவிடும். அதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்து தான். கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பச்சை சுண்டைக்காய்யை உணவில் சேர்த்து கொடுப்பது அவசியம். அதேபோல் நெய்யில் வதக்கி, லேசான மிளகத்தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக உள்ளவர்களுக்கு தினமும், சுண்டைக்காயை இந்த முறையில் தினமும் கொடுத்தால், உடனடியாக அவர்களின் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.