கையளவு இந்தக் காயை நெய்யில் வதக்கி... இரும்புச் சத்து ஒரே வாரத்தில் அதிகரிக்க இதைச் செய்யுங்க: டாக்டர் நித்யா
உடலில் ஏற்படும் நோய்களையும் சத்து குறைபாடுகளையும் தீர்க்க, இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள் பழங்கள், கீரை வகைகளை சாப்பிட்டு பிரச்சனையை தீர்க்க முடியம்.
உடலில் ஏற்படும் நோய்களையும் சத்து குறைபாடுகளையும் தீர்க்க, இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள் பழங்கள், கீரை வகைகளை சாப்பிட்டு பிரச்சனையை தீர்க்க முடியம்.
ஒரு மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க பல்வேறு சத்துக்கள் அவசியம் என்றாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒரு சத்து தான் இரும்புச்சத்து. இந்த சத்து உடலில் இருந்து குறைவும்போது பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக தலை சுற்றல், தலைவலி, உடல் சோர்வு, பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவது உள்ளிட்ட பல பிரச்னைகளை் சந்திக்கும் அபாயம் இருக்கும்.
Advertisment
அதேபோல் உடலில் ரத்த சிவப்பணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்க இரும்புச்சத்து அவசியம். மூளை நரம்புகளின் செயல்பாட்டுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்வது போன்ற முக்கிய வேலை இரும்புச்சத்துக்கு உண்டு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் வளர்சிதை மாற்றம், செல்கள் புத்துருவாக்கத்திற்கும் இரும்புச்சத்து முக்கியமாக பயன்படுகிறது.
உடலில் இரும்புச்சத்து தேவைதான் என்றாலும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல், உடலில் இரும்புச்சத்து அதிகமானாலும் நோய் தாக்கம் இருக்கும். அதனால் இரும்புச்சத்து பெறுவதற்காக, சாப்பிடும் உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. உணவே மருத்து என்று நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலம் மாற்றி இப்போது உணவே மாத்திரை என்ற காலம் வந்துவிட்டது. சிறு தலைவலி என்றாலும் மாத்திரை சாப்பிடும் வழக்கம் இப்போது அதிகமாக இருக்கிறது.
அதே சமயம், உடலில் ஏற்படும் நோய்களையும் சத்து குறைபாடுகளையும் தீர்க்க, இயற்கையில் கிடைக்கும் காய்கறிகள் பழங்கள், கீரை வகைகளை சாப்பிட்டு பிரச்சனையை தீர்க்க முடியம். அந்த வகையில் நமக்கு எளிதில் கிடைக்கும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளில் முக்கியமானது சுண்டைக்காய். அளவில் சிறியதாக இருந்தாலும், மற்ற காய்கறிகளை விடவும் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதை நறுக்கிவிட்டு சிறிது நேரம் வெளியில் வைத்தாலே அதன் நிறம் மாறும்.
Advertisment
Advertisements
சுண்டைக்காயில் இருக்கும் அதிகப்படியான இரும்புச்சத்தின் காரணமாக இது நிகழ்கிறது. கர்ப்பிணிகள், குழந்தைகள் என அனைவருக்குமே, சுண்டைக்காயை உணவில் சேர்த்தோ அல்லது நெய்யில் வதக்கியோ கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் செய்யும்போது உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். சுண்டைக்காய் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.