/indian-express-tamil/media/media_files/2025/05/31/mAPTCuFdc8gsfn0rWDoW.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் அதிகம் சந்திக்கும் முக்கிய பிரச்னை உடல் எடை அதிகரிப்பு. இதனை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். பொதுவாக உடலில் தைராய்டு பிரச்னை இருந்தால் தான் ஒபிசிட்டி என்ற பிரச்னை இருக்கும். இதனால் தைராய்டு ஹார்மோனை பேலன்ஸ் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன என்பது குறித்து டாக்டர் நித்யா கூறியுள்ளார்.
உடலில் தைராய்டு பிரச்னை இருக்கிறது, உடலில் உஷ்னம் இருக்கிறது, இதனுடன் சேர்த்து மூட்டுக்களில் வலி அதிகம் இருக்கிறது அதனால் உடல் எடை குறைப்பது என்பது பெரிய சிரமமாக இருக்கிறது என்று சொல்வார்கள். இதனுடன் சேர்த்து பெண்களுக்கு பல பிரச்னைகள் இருக்கும், மாதவிடாய் தவறுதல், பி.சி.ஓ.டி பிரச்னை, உள்ளிட்ட பல பிரச்னைகள் உடலில் இருக்கும் ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாகவும் வரும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
அதே சமயம் ஆண்களுக்கு, 35-40 வயதை கடந்தவர்களுக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும். இவ்வாறு இருக்கும்போது உடலில் இருக்கும் கழிவுகள், ஹார்மோகன் இம்பேலன்ஸை சரி செய்ய, வழிமுறைகள், மற்றும் மூட்டுவலி போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட எளிமையான வழிமுறைகளை பார்ப்போம். ஏற்கனகவே நீங்கள் தைராய்டு மருத்து அல்லது கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு மருந்து சாப்பிடுகிறீர்கள் என்றால், அதனுடன் சேர்த்து இந்த சித்த மருந்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அந்த மருத்து தான் திரிகடுக சூரணம். சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் சேர்ந்த கலவை தான் இந்த திரிகடுக சூரணம். பொதுவாக, 2-3 கிராம் திரிகடுகம் பொடியை வெந்நீரில் கலந்து அல்லது தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம். திரிகடுக பொடியை சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் பாதியாகும்வரை கொதித்த பிறகு, அதனை எடுத்து அதில், குங்குலிய பர்ப்பம் (ஒரு மில்லி கிராம்) சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது தான் திரிகடுக பொடியின் முழு பலனையும் பெற முடியும். உடலில் ஏற்படும் உஷ்னம், மூட்டுவலி ஆகியற்றை குறைக்க, இந்த குங்குலிய பர்ப்பம் பயன்படுகிறது.
உணவு சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தான், குங்கிலிய பர்ப்பம் சேர்த்த திரிகடுக கஷாயத்தை குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் குடிக்கும்போது, திரிகடுகம் பொடியில் உள்ள மருத்துவ குணங்கள் சளி, இருமல் மற்றும் தொண்டைப்புண் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது. இது செரிமான அமில சுரப்பைத் தூண்டி, உணவு செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், மலச்சிக்கல், வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.