சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களில் ஒன்று மஞ்சள். இந்த மஞ்சள், உடலுக்கு ஆரோக்கியமும் தரக்கூடியது. அதே சமயம், மஞ்சளை அப்படியே அல்லது தூளாக நேரடியாக எடுத்துக்கொண்டால், அதன் ஆரோக்கிய நன்மை நமக்கு முழுமையாக கிடைக்காது. உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக மஞ்சள் தூள் வைப்பார்கள். அதற்கு காரணம் மஞ்சள் நோய் எதிர்ப்பாக இருக்கும்.
Advertisment
அதேபோல், உடலில், சளி மற்றும் இருமல் தொந்தரவு இருந்தால், மஞ்சள் பால் கொடுப்பார்கள். மஞ்சள் தூளை நேரடியாக உடலில் எடுத்துக்கொள்ளும்போது அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்காது. ஆனால் பாலில் சேர்த்து சாப்பிடும்போது அதன் சத்துக்கள் கிடைக்கும். மஞ்சளில் இருக்கும் சத்துக்களை முழுமையாக பெறுவதற்கு, இந்த முறைதான் சரியான வழி என்று, டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
மிளகு மஞ்சள் பால் எப்படி செய்வது?
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்:
பால் – ஒரு டம்ளர்
மிளகு தூள் – கால் டீஸ்பூன்
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
பனங்கற்கண்டு – சிறிதளவு
செய்முறை:
முதலில் ஒரு பானில் பால் எடுத்துக்கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள மிளகு தூள், மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதன்பிறகு இறுதியாக பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதே சமயம், உடலில் ஏற்படும் சளி இருமல் தொந்தரவுகள் நீங்கிவிடும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.