உடலில் ஏற்படும் 12 வகையான நோய்களை குணப்படுத்தும் வல்லமை வெண்பூசனிக்கு உண்டு. இதை எப்படி சாப்பிட வேண்டும் என்பது குறித்து டாக்டர் தீபா கூறியுள்ளார்.
Advertisment
நமது அன்றாட வாழ்க்கையில் எளிதாக கிடைக்கும் உணவுப்பொருள் வெண்பூசணி. இதில், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இது குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
வெண்பூசணியில் 90% நீர்ச்சத்து இருப்பதால் உடலில் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது மற்றும் ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. வெண்பூசணி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதேபோல் தினமும் காலை எழுந்தவுடன், வெண்பூசணி காயில் ஸ்மூதி மாதிரி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டம்பளர் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால், உடலில் ரத்த அழுத்தம் எப்போதும் அளவுடனே இருக்கும். நாளடைவில் மருந்துகள் எடுத்துக்கொள்ளாத வாழ்க்கையை வாழ வழி செய்யும்.
Advertisment
Advertisements
வெண்பூசணியில் உள்ள நீர்ச்சத்து, ரத்த அழுத்தத்தை மட்டுமல்லாமல், கிட்டியின் வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது, வெண் பூசணியை சூப்பு மாதிரி செய்து சாப்பிடலாம் அல்லது வேக வைத்து சாப்பிடலாம். கிட்டினி ஃபெயிலியர் ஆனவர்கள், வெண்பூசணியை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. தண்ணீரில் மிளகு, சீரகம், இஞ்சி எல்லாம் சேர்த்து அதில் வெண்பூசணிக்காயை சேர்த்து, கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிக்கும்போது சிறுநீரை அதிகரிக்கும் என்று கூறியள்ளார்.