/indian-express-tamil/media/media_files/2025/06/07/kNNlXixDHH2JMsWIggJR.jpg)
உடல் வெப்பம் அல்லது உஷ்ணமாக இருப்பதை உடல் சூடு என்று சொல்வார்கள். பொதுவாக, மனித உடலின் இயல்பான வெப்பநிலை சுமார் 37°C (98.6°F) ஆகும். இந்த வெப்பநிலை அதிகமாகும் போது, "உடல் சூடு" என்று அழைக்கப்படுகிறது.
உடல் சூடு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். வெப்பமான வானிலை அல்லது அதிக வெப்பமான சூழலில் இருப்பது. தீவிரமான உடற்பயிற்சி அல்லது அதிக உடல் உழைப்பு. தசைகள் வெப்பத்தை உருவாக்குவதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கலாம். உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாதது. நீர்ச்சத்து குறைவாக இருக்கும்போது, உடல் தன்னை குளிர்விப்பது கடினமாகிறது.
காரமான, புளிப்பான, உப்புத்தன்மை கொண்ட உணவுகள், அதிக இறைச்சி, காபி, டீ போன்றவற்றை அதிகம் உட்கொள்வது. காய்ச்சல், தைராய்டு பிரச்சனைகள் போன்ற சில நோய்கள் அல்லது சில மருந்துகள் உடல் சூட்டை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலும் உடல் சூட்டை அதிகரிக்கலாம். பித்தம் அதிகரிப்பதும் உடல் சூட்டுக்கு ஒரு முக்கிய காரணம். இவ்வாறு உடல் சூட்டுக்கு பல காரணங்கள் இருக்கலாம்.
அதே சமயம் சிலர் அசைவ உணவு குறிப்பாக கோழிக்கறி சாப்பிட்டால் தனக்கு சூடு என்று சொல்வார்கள். ஆனால் செத்த கோழியில் சூடு என்பது இல்லை. கோழிக்கறி சாப்பிட்டால் உடலில் சூடு அதிகமாகிவிடும் என்று சொல்கிறார்கள். தமிழகத்தில், ஒவ்வொரு மனிதனுக்கும் பரிட்சையமான விஷயம் என்ன என்றால் அசைவ உணவுகள் சூடு என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அசைவ உணவுகளில் ஒன்றுமே கிடையாது.
வெளிநாடுகளில், சூப் மாதிரி வைத்து சாப்பிடும் பழக்கம் இருப்பதால் அவர்களுக்கு இந்த பிரச்னை வராது. கறி மட்டும் அல்லாமல் அதில் கொஞ்சம் காய்கறிகளையும் சேர்த்து சாப்பிடுவார்கள். இதனால், அந்த பிரச்னை இல்லை. அதேபோல், வெளிநாடுகளில் காய்கறிகள் வைத்து சாலட் செய்வதால், இந்த பிரச்னை இருக்காது என்று டாக்டர் அருணாச்சலம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.