ஆண்மைக் குறைவை போக்கும் வல்லமை... வெறும் வயிற்றில் தினமும் இந்தப் பால் குடிங்க: டாக்டர் தீபா அருளாளன் டிப்ஸ்!
பால் மற்றும் பிற பால் பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பால் ஒவ்வாமை அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது. எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் இதில் உள்ளது.
பால் மற்றும் பிற பால் பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பால் ஒவ்வாமை அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது. எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் இதில் உள்ளது.
வயிற்றின் இரைப்பை அல்லது முன்சிறுகுடலின் உட்புறச் சுவரில் ஏற்படும் புண் அல்சர் என்று சொல்வார்கள். புகைப்பிடிப்பது, மது அருந்துவது, காரணமாக உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்களால் இந்த அல்சர் பிரச்னை ஏற்படலாம். சில சமயங்களில் மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரமணாக அதிக அமில சுரப்புக்கு வழிவகுக்கும். இதன் காரணமாகவும் வயிற்றில் புண்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
Advertisment
வயிற்றின் மேல் பகுதியில் எரிச்சல் அல்லது வலி, நெஞ்செரிச்சல், மலத்தில், இரத்தம் அல்லது கருப்பு நிற மலம், இரத்த சோகை அல்லது தலைச்சுற்றல் உள்ளிட்ட அறிகுறிகள் அல்சர் பிரச்னை இருப்பதற்காக அறிகுறிகளாக இருக்கிறது. இந்த பிரச்னையில் இருந்து விடுபடவும், வரும் முன் தற்காத்துக்கொள்ளவும், தேங்காய் பால் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுகிறது.
தேங்காய் துருவலின் முதல் முறை பிழிந்து எடுக்கப்படும் பால் அதிக கொழுப்புச் சத்துடனும், அடர்த்தியாகவும் இருக்கும். இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் இதன் அடர்த்தியான தன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், தேங்காய் துருவலை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை பிழிந்து எடுக்கும்போது கிடைக்கும் பால் குறைவான கொழுப்புச் சத்துடனும், தண்ணீராகவும் இருக்கும். பொதுவாக குழம்பு மற்றும் பிற திரவ உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
பால் மற்றும் பிற பால் பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். பால் ஒவ்வாமை அல்லது சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்றது. எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம் இதில் உள்ளது. அல்சர் பிரச்னை உள்ளவர்களுக்கு தினமும் காலையில் தேங்காய் பால் குடிக்க வேண்டும். இப்படியே 10 நாட்கள் குடித்த பின்பு, அடுத்து ஒருநாள் விட்டு ஒருநாள் தேங்காய் பால் குடிக்க வேண்டும். உணவில் காரத்தை குறைக்க வேண்டும். சரியாக நேரத்தில் உணவு சாப்பிட வேண்டும். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
உடலில் புண்கள் எங்கு இருந்தாலும் அதனை சரி செய்யக்கூடிய சக்தி தேங்காய் பாலுக்கு உண்டு. புண்களுக்கு மட்டும் இல்லாமல், ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை, ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. காலையில் வெறும் வயிற்றில் 50 எம்.எல். தேங்காய் பால் குடிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு குடித்து வரும்போது, விந்து முந்துதல், விந்தணு குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் தீர்க்கப்படும். அழகும் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது தான் இந்த தேங்காய் பால். அந்த வகையில் தோல் அழகுக்கும் தேங்காய் பால் உதவும் என்று டாக்டர், டாக்டர் தீபா அருளாளன் கூறியுள்ளார்.