மருந்து, மாத்திரைக்கு குட்பை... படத்த உடனே தூங்க அற்புத வழி: சொல்லும் டாக்டர் அக்ஷயன்
பல நோய்களுக்கு அடிப்படை காரணம் மனச்சிக்கலும், மலச்சிக்கலும் என்று சொல்லலாம். இதில் மனச்சிக்கல் வரும்போது தூக்கமின்மை அதிகரிக்கும். தூங்கமின்மை பிரச்னையை சரி செய்தாலே பல நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கலாம்.
பல நோய்களுக்கு அடிப்படை காரணம் மனச்சிக்கலும், மலச்சிக்கலும் என்று சொல்லலாம். இதில் மனச்சிக்கல் வரும்போது தூக்கமின்மை அதிகரிக்கும். தூங்கமின்மை பிரச்னையை சரி செய்தாலே பல நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் பலரும் சந்திக்கும் முக்கிய பிரச்னை தூக்கமின். குறிப்பாக ஸ்மடார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பலரும், நள்ளிரவு வரை வழித்து போனை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இதனால் நள்ளிரவை கடந்த பின்பும் தூங்கலாம் என்று நினைத்தால் அவர்களுக்கு தூக்கம் வராது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
Advertisment
மேலும் சரியாக தூங்க வேண்டும் என்பதற்காக மாத்திரைகள் பயன்படுத்தும் நிலையும் தற்போது அதிகமாக உள்ளது. ஆனால் உடல் தன்னை தானே ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், தூக்கம் மிக அவசியம். அதிலும் சரியான நேரத்தில் தூங்குவது மிகவும் முக்கியமானது. ஒரு சராசரி மனிதன் 8 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். சில வேலை காரணமாக இரவில் தூங்காமல் பகலில் தூங்க வேண்டிய நிலையும் உள்ளது.
பல நோய்களுக்கு அடிப்படை காரணம் மனச்சிக்கலும், மலச்சிக்கலும் என்று சொல்லலாம். இதில் மனச்சிக்கல் வரும்போது தூக்கமின்மை அதிகரிக்கும். தூங்கமின்மை பிரச்னையை சரி செய்தாலே பல நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கலாம். தூங்கும்போது தான உணவு செரிமானம் ஆகி உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். ஆனால் தூக்கமின்மை பிரச்னை இருந்தால், அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.
ஒரு சிலர் தூக்கம் வராததால், மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவபவர்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல, மாத்திரை இல்லாமல் என்ன வழி என்பது குறித்து டாக்டர் அக்ஷயன் கூறியுள்ளார். நீங்கள் தூங்க செல்லும் முன், உங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடியது எது என்பது குறித்து பார்த்துக்கொள்ள வேண்டும். நாம் வீட்டில் பயன்படுததப்படும் கசகசாவை மாலையில் பாலில் அல்லது தண்ணீரில், ஊறவைத்து, கொதிக்க வைத்து இரவில் குடித்துவிட்டு படுத்தால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
Advertisment
Advertisements
அடுத்து ஜாதிக்காய் பொடியை ஒரு டீஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலக்கி குடித்தால் நல்ல தூக்கம் வரும். இரவு தூங்குவதற்கு முன்பு, நடை பயிற்சி செய்வதும் நன்று தூக்கம் வர நல்ல வழியாகும் என்று டாக்டர் கூறியுள்ளார்.