நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என்பது ஒரு வளர்சிதை மாற்ற நோய். நம் உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோது அல்லது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது இது ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன் ஆகும். இது சரியாக வேலை செய்யாதபோது, குளுக்கோஸ் இரத்தத்திலேயே தங்கி, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
Advertisment
இந்த நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உள்ளது. இதில், டைப் 1 சர்க்கரை நோயில், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழித்துவிடுகிறது. இதனால் உடல் இன்சுலின் உற்பத்தி செய்வதை முற்றிலும் நிறுத்திவிடுகிறது. பெரும்பாலும் குழந்தைப் பருவம் அல்லது இளம் வயதிலேயே இது ஏற்படுகிறது.
டைப் 2 நீரிழிவு நோய் என்பது, மிகவும் பொதுவான வகை நீரிழிவு. இதில் உடல் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாது (இன்சுலின் எதிர்ப்பு அல்லது கணையம் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாது. இது முக்கியமாக வயது முதிர்ந்தவர்களுக்கு வருகிறது, ஆனால் சமீப காலமாக இளம் வயதினரிடமும் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் வந்துவிட்டால் நோயாளிகள் உணவில் கட்டுப்பாடுகளை பராமரிப்பது அவசியம். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் இரவில் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை மெல்ல மெல்ல உணவில் இருந்து கரைக்கக்கூடிய குறைவான க்ளைசிபிக்இன்டக் உடைய இரவு உணவாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முக்கியமானது கோதுமை ரவா உப்புமா. உடைத்த கோதுமை ரவை, அல்லது சிறுதானியத்தில் வரகு சாமை இவற்றை சாப்பிடலாம் என்று கூறியுள்ளார். கோதுமை ரவை வைத்து உப்புமா செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் நெய் சேர்த்து அதில் பட்டை கிராம்பு முந்திரி சேர்த்து தாளித்து, வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, புதினா, கேரட, பீன்ஸ், பட்டாணி சேர்த்து மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியாக இதில் கோதுமை ரவா சேர்த்து, தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு பதத்திற்கு வந்தவுடன், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மூடிவைத்து இறக்கினால் சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி.