நம் உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்தாதபோது அல்லது போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தால் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இது சரியாக வேலை செய்யாதபோது, குளுக்கோஸ் இரத்தத்திலேயே தங்கி, இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
இந்த நீரிழிவு நோயில் டைப் 1 மற்றும் டைப் 2 என இரு வகைகள் உள்ளது. இதில், டைப் 1 சர்க்கரை நோயில், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் தவறுதலாக கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களை அழித்துவிடுகிறது. டைப் 2 நீரிழிவு நோய் என்பது, மிகவும் பொதுவான வகை நீரிழிவு. இதில் உடல் இன்சுலினை உற்பத்தி செய்தாலும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாது.
நீரிழிவு நோய் வந்துவிட்டால், உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. அதே சமயம், நீரிழிவு என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும், உணவுக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றினாலும் சில சமயங்களில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வருவதில்லை. இந்த பிரச்னையால் அவதிப்படுபவர்கள், நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் ஒரு எளிய, ஆனால் மிகவும் சக்திவாய்ந்த தீர்வு உள்ளது.
சிந்தில் கொடியுடன்" சேர்த்து ஒரு சில பொருட்களைப் பயன்படுத்தினால், உங்கள் இரத்த சர்க்கரை அளவை படிப்படியாகக் குறைத்து, கட்டுக்குள் கொண்டு வர முடியும். இந்த அற்புதமான கலவையைத் தயாரிக்க உங்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் சிந்தில் கொடி - 100 கிராம், கொரைக்கிழங்கு - 100 கிராம், கருவேப்பிலை- 50 கிராம், கீழாநெல்லி - 50 கிராம், ஜாதிகாய் - 50 கிராம், கடுக்காய் - 50 கிராம்நெல்லி வற்றல் - 50 கிராம்.
இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்கும். அனைத்து பொருட்களையும் தனித்தனியாக சுத்தம் செய்து, நன்கு காய வைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இந்தப் பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தினமும் காலை வேளையில் 2 கிராம் பொடியையும், இரவு வேளையில் 2 கிராம் பொடியையும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இந்த கலவையைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் இரத்த சர்க்கரை அளவில் அற்புதமான மாற்றத்தைக் காணலாம்.