/indian-express-tamil/media/media_files/2024/12/13/qnmsNCDKm6oodfvZpAH8.jpg)
நமது அன்றாட வாழ்க்கையில் எளிமையாக கிடைக்கக்கூடிய உணவு பொருட்களில் ஒன்று வேர்க்கடலை. இதனை பச்சையாகவோ அல்லது வருத்தோ, சட்னி வடிவிலோ எடுத்துக்கொள்ளலாம். புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் (குறிப்பாக வைட்டமின் ஈ, பி வைட்டமின்கள்), மற்றும் தாதுக்கள் (மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு) வேர்க்கடலையில் அதிக அளவில் உள்ளன.
அதிகமான சத்துக்கள் இருந்தாலும் வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்ற தகவல் அதிகமாக பரவி வருகிறது. இது உண்மையா? இது குறித்து விளக்கம் அளித்துள்ள டாக்டர் கௌதமன் கூறுகையில், ஒரு கிலோ பச்சை வேர்க்கடலையில், 500 எம்.எல். பால் கிடைக்கும். இந்த பாடலை பதப்படுத்தினால் 300 எம்.எல்.ஆயில் கிடைக்கும். இதன் மூலம் ஒரு கிலோ வேர்க்கடலை சாப்பிட்டால், நமது உடலில் 300 எம்.எல் ஆயில் சாப்பிட்டதற்கு சமமா என்றால் இல்லை.
திரவமாக இருக்கக்கூடிய ஒரு பொருளில்ல இருந்து கிடைக்கும் கொழுப்பை ஜீரனமாக்கக்கூடிய சக்தி நமது உடம்புக்கு கிடையாது. பச்சை வேர்க்கடலை அல்லது பச்சை வேர்க்கடலையை வேக வைத்து சாப்பிட்டாலும் சரி, அதில் இருக்கும் கொழுப்பில் ஒரு சதவீதம் கூட நமது உடலில் சேராது. அதே சமயம் வேர்க்கடலையில் இருக்கும் நார்ச்சத்து நமது உடலுக்கு மிகப்பெரிய பலமாக அமையும். இதே வேர்க்கடலையை காய வைத்து அதில் இருக்கும் நீர்த்தன்மையை அகற்றிவிட்டு சாப்பிட்டால், உடலில் கொழுப்பு அதிகரிக்கும்.
காய்ந்த நீர்த்தன்மை இழந்த வேர்க்கடலையை ஒரு கிலோ சாப்பிடும்போது அதில் இருந்து 700 எம்.எல். எண்ணெய் கிடைப்பததை பார்க்கலாம். உலர்ந்த வேர்க்கடலை திரவமற்ற முறையில் இருக்கும் அதை சாப்பிட்டால், உடலில் கொழுப்பாக மாறி உடலில் பல நோய்களுக்கு குறிப்பாக பித்த நோய்களுக்கு வழிவகுக்கும் என்று, கௌதம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.