/indian-express-tamil/media/media_files/2025/04/23/YcrEfnK9O6336ntDyVbs.jpg)
மலம் கழிப்பதில் சிரமம் (மலச்சிக்கல்) அல்லது அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஆசனவாய் பகுதியில் எரிச்சலை உண்டாக்கும். ஆசனவாய் பகுதியில் அதிகப்படியான வியர்வை அல்லது ஈரப்பதம் இருந்தால், அது எரிச்சலுக்கு வழிவகுக்கும். இறுக்கமான ஆடைகள் அணிவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆசனவாய் பகுதியைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பது அல்லது அதிகமாகச் சுத்தம் செய்வது, கடுமையான சோப்புகளைப் பயன்படுத்துவது போன்றவை எரிச்சலை ஏற்படுத்தலாம்.
மூல நோய் உள்ளவர்களுக்கு ஆசனவாயில் வலி, இரத்தப்போக்குடன் எரிச்சலும் ஏற்படலாம். ஆசனவாயில் ஏற்படும் சிறிய வெடிப்பு அல்லது புண் மலம் கழிக்கும் போது கடுமையான வலியுடனும் எரிச்சலுடனும் இருக்கும். இதுபோன்ற ஆசனவாய் பிரச்னை, அல்சர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, சப்ஜா விதைகள் தீர்வு தரும் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில் சப்ஜா விதைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சப்ஜா விதைகளை பயன்படுத்துவதற்கு முன்பாக 20 முதல் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அப்போது அதில் ஜெல் மாதிரி ஃபார்ம் ஆகும். இந்த ஜெல் தான் அதிகமான மருத்துவ குணம் கொண்டது. இதோட தன்மையே அதுதான். ஒரு சிலருக்கு ரொம்ப ஹீட் ஆகும்போது தொண்டை வறண்டு காணப்படும். அதிகமா ட்ரைனஸ் இருக்கிறது ஸ்டொமக் பகுதியில் அல்சர்ஃபார்மேஷன் இருக்கும். இதை அல்சரேட்டிவ் குவாலிட்டீஸ் என்று சொல்வார்கள். இதனால் அதிகமான வயிற்று புண்கள் இருக்கு.
பவல் சின்ட்ரோம் இருக்கு. நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பைல்ஸ் அண்ட் பிஸ்டுலா பிரச்னையால், ஆசனாவாய் பகுதியில ஒரு எரிச்சல் இருந்து கொண்டே இருக்கு என்று சொல்வார்கள். இந்த மாதிரி இருக்கக்கூடிய நபர்கள் இந்த சப்ஜா விதைகளை காலையிலே குடிக்கலாம். இதை எப்படி பயன்படுத்தலாம் என்றால் மோரில் கலந்து குடிக்கலாம். சப்ஜா விதைகளை நம்ம தண்ணீர்ல ஊற வைத்ததுக்கு அப்புறம் ஒரு ரெண்டு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு கிளாஸ் மோர்ல கலந்து குடிக்கலாம் என்று டாக்ர் நித்யா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.