இன்றைய காலக்கட்டத்தில் திருமண வயதில் இருக்கும் ஆண்கள் பலரும் தாம்பத்தியத்தில் தங்களால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக, விறைப்புத்தன்மை குறைபாடு குறித்து பல சந்தேகங்கள் அவர்களுக்கு எழுகிறது. இதை நிர்வர்த்தி செய்துகொள்ள பல இணையதளங்களில், தேடி தனக்கான பதிலை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்,
Advertisment
அந்த வகையில் ஆண் விறைப்புத்தன்மை குறைபாடு இருப்பவர்களுக்கு டாக்டர் நித்யா ஒரு மருத்துவ முறை பற்றி கூறியுள்ளார். உடலில் டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் தன்மை குறையும்போது தான் இந்த விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் 30 வயதிற்குள் இருக்கும் ஆண்களுக்குமே இந்த பிரச்னை இருக்கிறது. இதனை சரி செய்ய, கால்சியம், புரதம், மெக்னீசியம், ஜிங்க் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பாக கால்சியம், புரோட்டின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இரவு நேரத்தில், அதிகம் விழித்திருப்பது, ஆண்கள் அணியும் உள்ளாடைகள், இருக்கமான ஆடைகளை அதிக நேரம் அணிந்திருக்கும்போது, இந்த மாதிரி பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆண்களின் விதைப்பை உடலின் வெப்பநிலையை விட, குறைவாக இருப்பது போன்று தான் இருக்கிறது.
அதே சமயம், இருக்கமான உடை அணியும்போது, விதைப்பை அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும். இதனால் உடலில் உஷ்ணம் அதிகமாககும்போது விறைப்புத்தன்மை குறைபாடு அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய உணவு முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதற்காக காலையில், மோர் குடிப்பது நமது உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைக்க வழி செய்யும். அதேபோல் வாரம் 2-3 முறை சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
அதேபோல் பனங்கிழங்கு, முடவாட்டுக்கால் கிழங்கு, மரவள்ளி கிழங்கு ஆகியவை சாப்பிடலாம். இவை அனைத்தும் ஆண்களுக்கான பிரத்யோக உணவு என்று சொல்லலாம். தூதுவளை, வல்லாரை, பிரண்டை, முருங்கை ஆகிய கீரை வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வது ஆண் விறைப்புத்தன்மையை அதிகரிக்கும். குறிப்பாக முருங்கை பூ மற்றும் விதைகள் ஆண்களுக்கு, முக்கிய நன்மை தரும் உணவாக இருக்கிறது. அதேபோல் முளைக்கட்டிய பச்சைபயறு. நரிப்பயறு சாப்பிடலாம்.
இதில் குறிப்பாக முளைக்கட்டிய நரிப்பயறு ஆண்களுக்கு அவ்வளவு சிறந்த நன்மைகளை கொடுக்கும். தினமும் 2-3 ஸ்பூன் அளவுக்கு இதை சாப்பிடலாம். அதேபோல் முளைக்கட்டிய கேழ்வரகு, கம்பு இந்த தானியங்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் நித்யா கூறியுள்ளார்.