55 வயதில் ஆண்களுக்கு இந்த இடத்தில் வரும் வீக்கம்... கேன்சராக மாறாமல் தடுக்கும் 2 பொருள்: டாக்டர் சிவராமன் டிப்ஸ்
குறிப்பாக ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல், புரோஸ்டேட் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் பின்னாளில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் டாக்டர் சிவராமன்.
குறிப்பாக ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல், புரோஸ்டேட் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் பின்னாளில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார் டாக்டர் சிவராமன்.
ஆண்களின் சிறுநீர் பாதையில் ஏற்படும் ஒரு பாக்டீரியா தொற்று ஆண் சிறுநீரக தொற்றுநோய் என்று சொல்வர்கள். சிறுநீர் பாதை என்பது சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்வழி ஆகியவற்றைக் கொண்டது. பெண்களை விட ஆண்களுக்கு சிறுநீரக தொற்றுநோய் குறைவாகவே ஏற்படுகிறது.
Advertisment
இதற்கு முக்கிய காரணம், ஆண்களுக்கு சிறுநீர்வழி நீளமாக இருப்பது மற்றும் புரோஸ்டேட் சுரப்பியில் இருந்து வரும் திரவம் பாக்டீரியா வளர்ச்சியைத் தடுப்பது ஆகியவை இருக்கலாம். இருப்பினும், சில காரணிகள் ஆண்களுக்கு சிறுநீரக தொற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து தொற்றுநோயை ஏற்படுத்தலாம். புரோஸ்டேட் வீக்கம் அல்லது புரோஸ்டேடிடிஸ் சிறுநீர் ஓட்டத்தை தடைசெய்து தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். அதேபோல், சிறுநீர் கழிக்க முடியாதவர்களுக்குப் பயன்படுத்தப்படும் வடிகுழாய் பாக்டீரியா நுழைவதற்கு வழிவகுக்கும். சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு, சிறுநீர் கழிக்க அவசரமாக இருப்பது, குறைந்த அளவு சிறுநீர் கழித்தல், சிறுநீர் மேகமூட்டமாக அல்லது துர்நாற்றம் வீசுவது, சிறுநீரில் இரத்தம் உள்ளிட்ட அறிகுறிகள், சிறுநீர் தொற்றுக்கள் இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
Advertisment
Advertisements
குறிப்பாக ஆண்களுக்கு 55 வயதுக்கு மேல், புரோஸ்டேட் வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் பின்னாளில் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ள டாக்டர் சிவராமன் அதற்கான தீர்வையும் கூறியுள்ளார் அதன்படி, உலகம் முழுவதும் நடத்திய ஆய்வில், வெள்ளரி விதை ஆண்களின், புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், வெள்ளரிக்காய் ஆண்களுக்கான சிறுநீர் தொற்றுநோய் வராமல் தடுக்கும். ஆண்களுக்கான புரோஸ்டேட் வீக்கம் புற்றுநோயாக மாறாமல் இருக்க 2 மருந்துகள் தான் வழி செய்யும் அதில் ஒன்று வெள்ளரிக்காய், மற்றொன்று வெண்பூசணிக்காய் என்று கூறியுள்ளார்.