உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் கீரைக்கு அதிக பங்கு உண்டு. அதிலும் குறிப்பாக முருங்கை கீரை இரும்புச்சத்து உட்பட பல சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. கீரையை வைத்து முருங்கை கீரை சாதம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 2 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
கருப்பு மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
வர மல்லி - 1 தேக்கரண்டி
பூண்டு - 3 பல் (நறுக்கியது)
கறிவேப்பிலை
காய்ந்த மிளகாய் - 2
முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு கடாயில் முருங்கைக் கீரையைச் சேர்த்து, நன்கு வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். கீரை நன்கு வறுபட்டவுடன், தேவையான மசாலாப் பொருட்களுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து, ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து அதையும் வதக்க வேண்டும்.
ஒரு பெரிய கிண்ணத்தில் சமைத்த சாதத்தை எடுத்து, வதக்கிய வெங்காயக் கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக, அரைத்து வைத்துள்ள முருங்கைக் கீரை மசாலாப் பொடியைச் சாதத்துடன் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது சுவையான முருங்கைக் கீரை சாதம் தயார்.