இன்றைய காலக்கட்டத்தில் பலரும் அதிகம் சந்திக்கும் முக்கிய பிரச்னை மாரடைப்பு. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை சில சமயங்களில் பள்ளி மாணவர்கள் கூட இந்த மாரடைப்பு பிரச்னையை சந்தித்து வருகின்றனர். மாரடைப்பு என்பது இதயத்தின் ஒரு பகுதிக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படுகிறது. இது இதய தசைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் உயிருக்கு ஆபத்தானது.
Advertisment
மார்பு வலி அல்லது அசௌகரியம் (நெஞ்சை அழுத்துவது, இறுக்குவது அல்லது வலிப்பது போன்ற உணர்வு), தோள்பட்டை, கை, கழுத்து, முதுகு அல்லது தாடைக்கு பரவும் வலி, மூச்சுத் திணறல், உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அவை மாரடைப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம். சில நேரங்களில், மாரடைப்பு எந்த வெளிப்படையான அறிகுறிகளையும் ஏற்படுத்தாது, இது "அமைதியான மாரடைப்பு" என்று சொல்வார்கள்.
சிலர் இரவில் நன்றாக சாப்பிட்டு விட்டு உறங்க செல்வார்கள். ஆகால் காலையில் எழுந்திரிக்க மாட்டார்கள். இப்படி இருப்பவர்களுக்கு மார்ஸிவ் அட்டாக் என்று சொல்வார்கள். இரத்த உறைவு, கரோனரி தமனியின் தசைப்பிடிப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் இந்த மாரடைப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு, அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் என ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
Advertisment
Advertisements
அந்த வகையில், மாரடைப்பு ஏற்பாடாமல் தடுக்க, கேரட், பீட்ரூட், இஞ்சி, அரை லெமன் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸ் வடிவில் 6 மாதங்களக்கு தினமும் காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மருத்து சாப்பிடலாம். ஆனால் இதயத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் தசைகளுக்கு மருத்து சாப்பிட முடியாது என்று டாக்டர் ஆஷா லெனின் கூறியுள்ளார்.