ரத்த சோகை என்பது ரத்தத்தில் சிகப்பு ரத்த அணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதைக் குறிக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆக்சிஜனை தசைகளுக்கு சுமந்து செல்கிறது. ஒருவேளை ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்தாலோ, ஹீமோகுளோபின் அளவு குறைந்தாலோ தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்லும் திறன் ரத்தத்துக்குக் குறையும்.
Advertisment
இதன் காரணமாக உடற்சோர்வு, வலிமையின்மை, மயக்க உணர்வு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவை உண்டாகும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதுமே ஆண்களை விடவும் பெண்களுக்கே ஒப்பீட்டளவில் அதிகமாக ரத்த சோகை உள்ளது. குறிப்பாக குழந்தை பெறும் வயதில் உள்ள பெண்களுக்கு ரத்த சோகை குறைபாடு அதிகம். மாதவிடாய் மகப்பேறு போன்றவை காரணமாக பெண்களுக்கு ரத்தம் வெளியேறும் காரணிகள் இயற்கையாகவே இருப்பதால் பெண்களிடையே ரத்த சோகை அதிகமாக இருக்கிறது.
இந்த ரத்தசோகையை மாத்திரைகள் மூலமாக இல்லாமல், நம் உண்ணும் உணவின் மூலமாகவே சரி செய்யலாம். அந்த வகையில் தினமும் ஒரு கப் காராமணி உணவில் சேர்த்துக்கொண்டால் அன்றைய தினத்திற்கு தேவையான 88 சதவீதம், ஃபோலிட் ஊட்டச்சத்து உங்கள் உடலுக்கு கிடைத்துவிடும். இதன் மூலம் பல விதமான நோய் தொற்றுக்களை தவிர்க்க முடியும். குறிப்பாக அனிமியா என்ற ரத்தசோகை பாதிப்பு வராமல் தடுத்து, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் சீராக வைக்கும்.
Advertisment
Advertisements
அதே ஒரு கப் காராமணியில் 23 சதவீதம் இரும்புச்சத்தும் உள்ளது. இதன் மூலம் உடல் சோர்வு இல்லாலம் இருக்கலாம்.இந்த காராமணியை வேகவைத்து, அதனுடன், தக்காளி, சீரகம், கொத்தமல்லி, தேங்காய், பட்டை கிராம்பு, மிளகு, கசகசா, சின்ன வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து சேர்த்தக்கொள்ளவும். அதன்பிறகு இந்த கலவையை வேகவைத்து அதனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.